ஆசிய ஜோதி : தேசிக விநாயகம்பிள்ளை
கவிதை வடிவில் புத்தரைப் பற்றிய அரிய நூல். பௌத்தம் தொடர்பான ஆய்வில் அடியெடுத்து வைத்த காலத்தில் (1993வாக்கில்) இந்நூலைப் பற்றி நண்பர்களும், அறிஞர்களும் எடுத்துக்கூறியதைக் கேட்டு வாங்கிப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அண்மையில் இந்நூலை மறுபடியும் படித்தேன். புத்தர் வரலாற்றைப் பற்றிய அரிய செய்திகள் கவிதைகளாக, படிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் எளிதான வகையில் அமைந்துள்ளது. நான் வாசித்ததைப் பகிர்வதில் மகிழ்கின்றேன். "நமது பழந்தமிழ் நூல்களில் புத்தரைப் பற்றியும், பௌத்த சமயத்தைப் பற்றியும் பல குறிப்புகள் காணப்படுகின்றன. எனினும் அவற்றைக் கொண்டு நாம் புத்தர் பெருமானுடைய வரலாற்றை முற்றிலும் அறிந்துகொள்ள இயலாது. அக்குறையைக் கவிமணியவர்களின் ஆசிய ஜோதி இப்பொழுது போக்கிவிட்டது. ஆங்கிலத்தில் எட்வின் அர்னால்டு ஆசிய ஜோதி (Light of Asia) என்றும் பெயரில் கவிதை நூல் வெளியிட்டிருக்கிறார். அந்நூலைத் தழுவி தமிழ் மணம் கமழக் கவிமணியவர்கள் பழகுதமிழில் பாடியளித்திருக்கிறார்கள்" என்ற குறிப்பு பதிப்புரையில் காணப்படுகிறது. இந்நூல் புத்தர் அவதாரம், அருள் உரிமை, காதல் பிறந்த கதை, சித்த...