ஆபுத்திர காவியம் : மு.கு.ஜகந்நாதராஜா

பன்மொழிப்புலவர் மு.கு.ஜகந்நாதராஜா அவர்கள் எழுதியுள்ள ஆபுத்திரன் வரலாறு கூறும் காவியமான ஆபுத்திர காவியம் படித்தேன். முழுக்க முழுக்க காவிய நடையில் அமைந்துள்ள இந்நூலில் ஆபுத்திரனின் வரலாற்றைத் தந்துள்ளார் ஆசிரியர். முன்னுரையில் அவர் மணிமேகலையின் காவியச் சிறப்பை எடுத்துரைத்துள்ளார். "மணிமேகலை காவியம் மட்டுமே பசிக்கொடுமை பற்றியும் அதைத் தீர்க்க வேண்டும் என்றும் கூறுகிறது. உலகம் முழுதும் ஒன்றே எனும் உயர்ந்த கருத்தை நிலைநாட்ட உருவாக்கப்பட்டுள்ளது. மணிமேகலையில் வரும் எந்தத் துணைப் பாத்திரங்களும், பசிப்பிணியை மையப்படுத்தியே படைக்கப்பட்டுள்ளன" (ப.12) என்றும், "காவிய உலகில் மணிமேகலைக்கு தனிச் சிறப்புண்டு" என்றும் "இதன் பெருமையை தமிழர்களைவிட பிற மொழியினர் மொழிபெயர்ப்பு மூலமாக அறிந்து பாராட்டியுள்ளனர்" என்றும் கூறுகிறார். பன்ம ொழிப்புலவர் மு.கு.ஜகந்நாதராஜா ".......மணிமேகலையில் புத்தரைப் போற்றுகிறதே தவிர அவரது வாழ்க்கைச் சம்பவமோ, ஜாதகக் கதைகளையோ பற்றி குறிப்பிட்டாலும் அதனை மையப்படுத்தி காவியம் எழுதவில்லை. அது தனித்தன்மையுடைய மாதவியின் மக...