Posts

Showing posts from August, 2013

In search of imprints of Buddha: Buddhamangalam

Image
Dr.  B. JAMBULINGAM JANUARY 1995 While discussing on my subject historian Mr Kudavayil Balasubramanian advised me to go to the places which were connected with Buddhism. This became part of my field work resulting in searching of the names connected with Buddha or Buddhism. JANUARY 1999 As I had to submit my Ph.D., thesis before December 1999, the number of my field trips increased. In the meantime I collected the news items which appeared in newspapers and other works. Surprisingly, I came across a news item in Dinamalar , Tamil Daily in which it was reported that there was a Buddha. It read thus: "A Buddha statue was found at Buddhamangalam in Akarakadambanur panchayat union of Kilvelur taluk in Nagapattinam district. Some years back the head portion and the body portion were found without any body's care.  Some villagers took interest to retrieve them. With the help of Thailand Buddhists they set up a peetam and put the statue on it. They could not able to connect ...

பௌத்த சுவட்டைத் தேடி : புத்தமங்கலம்

Image
ஜனவரி 1995 வரலாற்றறிஞர் முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் ஐயா அவர்களுடன் ஆய்வு தொடர்பாக விவாதித்துக் கொண்டிருந்தபோது பௌத்தம் தொடர்பான பெயர்கள் உள்ள ஊர்களைப் பார்க்கும்படிக் கூறியிருந்தார். என்னுடைய ஆய்வின் ஒரு பகுதியாக இவ்வாறான ஊர்களைத் தேடலும் அமைந்தது. சனவரி 1999 டிசம்பர் 1999க்குள் முனைவர் பட்டத்திற்கான ஆய்வேட்டை பல்கலைக்கழகத்தில் அளிப்பதற்கு வசதியாக அதிகமாக களப்பணி  மேற்கொண்டிருந்தேன். நாளிதழ்களிலும், பிற நூல்களிலும் வரும் செய்திகளைத் தொகுத்து வந்தேன். இந்நிலையில் தினமலர் இதழில் துண்டித்த தலையுடன் கூடிய புத்தர் சிலை என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியானது.  "நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் அகரகடம்பனூர் ஊராட்சிக்குட்பட்ட புத்தர்மங்கலம் கிராமத்தில் புத்தர் சிலை உள்ளது. சில வருடங்களுக்கு முன்பு தலைப்பகுதி மட்டும் தனியே துண்டிக்கப்பட்ட சிலை அநாதையாகக் கிடந்தது. இந்த நிலையில் கிராம பிரமுகர்கள் சிலர் முயற்சித்து தாய்லாந்து நாட்டுப் புத்த மதத்தினரின் உதவியுடன் கிராம மக்கள் சிலை இருந்த இடத்தில் பீடம் ஒன்றை அமைத்து புத்தர் சிலையை அந்தப் பீடத்தில் வைத்தனர். ஆனால் துண்டிக...