பௌத்த சுவட்டைத் தேடி : களத்தில் இறங்கும் முன்
முனைவர் பா. ஜம்புலிங்கம் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கண்காணிப்பாளராகப் பணிபுரிகிறார். சோழ நாட்டில் காணப்படும் பௌத்தச் சுவடுகளைப் பற்றிக் குறிப்பிடத் தக்க ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார். தன்னுடைய களப் பணியில் எதிர்கொண்ட அனுபவங்களை அவர் இனி நம்முடன் பகிர்ந்துகொள்ளவிருக்கிறார். இந்த வாரம் அறிமுகத்துடன்... 1993இல் தொடங்கி தொடர்ந்து நான் மேற்கொண்டுவரும் பௌத்த ஆய்வு தொடர்பாகக் களப்பணி சென்றபோது பல அனுபவங்களைப் பெறும் வாய்ப்பு கிடைத்தது. களத்தில் இறங்கும் முன்பாகச் சிந்திக்கத் தொடங்கியபோது ஆய்வு செய்ய விரும்பும் என்னுடைய விருப்பத்திற்கு வந்த ஆதரவைவிட மாற்றுக் கருத்துக்கள் அதிகம் இருந்தன. பல நண்பர்களும் ஆய்வாளர்களும் ஆசிரியர்களும் அப்போது சொன்னவற்றைச் சிந்திக்கும்போது இக்களத்தில் எவ்வாறு நான் துணிவோடு இறங்கினேன் என்பது எனக்கு வியப்பாக உள்ளது. · தம்பி, நீ பாக்குற அலுவலக வேலையை முழுசாப் பாரு. அதுபோதும். · உன்னாலெல்லாம் முடியாது. ஆய்வுங்கிறது கடல். · ஆய்வுப் பணிய கல்வியாளர்கள்தான் பாக்க முடியும். அனாவ...