Posts

Showing posts from May, 2016

பௌத்த சுவட்டைத் தேடி : பரிநிர்வாண புத்தர் சிலை

Image
சோழ நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பௌத்தம் தொடர்பான ஆய்வின்போது அமர்ந்த நிலை மற்றும் நின்ற நிலையிலான புத்தர் சிலைகளைப் பார்த்துள்ளேன். எனது பௌத்த ஆய்வினைப் பாராட்டும் நண்பர்களில் ஒருவரான முனைவர் இரா. பாவேந்தன் பரிநிர்வாண புத்தர் சிலையின் புகைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பினைத் தந்துள்ளார். அச்சிலையைப் பற்றி அறிய அழைக்கிறேன். ஏப்ரல் 19 அன்று கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழக தமிழ் உதவிப்பேராசிரியரும், துணைவேந்தரின் தொழில்நுட்ப மற்றும் தனி அலுவலுருமான நண்பர் முனைவர் பாவேந்தன் அவர்கள் தன் முகநூல் பதிவாக கீழ்க்கண்ட கிடந்த நிலையிலான புத்தரைப் பற்றிய ஒரு பதிவினை எழுதியிருந்தார். முன்பொரு முறை இந்த புத்தர் சிலையின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அப்போது புகைப்படத்தோடு எவ்வித குறிப்பும் காணப்படவில்லை. "அரிய புத்தர் சிற்பம் ... கண்டுபிடிக்க உதவுங்கள்.. தமிழகத்தில் அழிந்து வரும்/அழிக்கப்பட்டு வரும் பெளத்த கலை வரலாற்று பொக்கிஷங்களில் இந்த படத்தில் உள்ள சிற்பம்   என் கவனத்தை கவர்ந்தது. கடந்த ஆண்டு இந்த புகைப்படத்தை என் முக நூலில் வெளியிட்டேன். ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர