Saturday, 15 March 2014

In search of imprints of Buddhism: Manambadi

1960
Among others P.R.Srinivasan (1960) and Sivaramalingam (1997) discussed about the Buddha statue found in Manambadi. French Institute of Pondicherry has in its collection the photograph of Manambadi Buddha. ) There is reference in Tamil Nattu Varalaru: Chola Peruvendar Kaalam (1998) published by Government of Tamil Nadu. During my first field visit the statue which was found in neglected condition is now in worship. 

APRIL 1995
When I had discussion with scholars and friends many of them informed me of the Buddha found in Manambdi which was near Tiruppanandal. During my tete-a-tete with historian Mr Kumbakonam Sethuraman he talked about   the inscription found in Kumbakonam Kumbeswarar Temple which speaks about the Buddha temple in Elanthurai and hinted about Manambadi Buddha. I waited for a suitable date to see the Buddha.



OCTOBER 1998
After three years I had a chance of visiting Manambadi. My elder son Mr Bharath accompanied me.  After searching the relevant sources on Buddha temple in Elanthurai, we went to Perunjeri and then arrived Kumbakonam. Before leaving for Thanjavur while I thought of any other Buddha statues found in the area, Manambadi Buddha came to my mind. My son also wanted to see the Buddha. We reached Manambadi, by Kumabkonam-Pandanallur bus, which was near Cholapuram. I gave  my camera to him. He started photographing the Buddha. While I informed him that the Buddha photographed by him would find a place in my Ph.D., Thesis, he felt very happy. After taking notes about the Buddha we started from Manambadi.

Manambadi Buddha (1998), Photograph: J.Bharath
Of the Buddha statues found in the Chola country, this Buddha was very beautiful. Among the bushes the Buddha was found in a neglected condition. The Buddha was in sitting dhyana posture. 

MAY 2002
On Buddha Poornima (26.5.2002) the place in which the Buddha was found cleaned by the local people and special pujas were held to the Buddha. 

On Buddha Poornima, Courtesy: The Hindu, 31.5.2002 (In this newsitem the information given by me about the Buddha was found)


JANUARY 2005
At attempt to steal the statue was foiled in Keeranur in Pudukottai district and the statue was returned to Manambadi. Once again pujas were conducted to the Buddha by the local people. 

JULY 2007
Through subsequent field visits it was found that the place was properly maintained for some time. Proper fencing was done and the Buddha was found exhibited. Thus the place also got a facelift.

Manambadi Buddha, Courtesy: Dinamalar, 16.7.2007

MARCH 2010
After covering Kutthalam, Perunjeri, Pandanallur and Chickanayakkanpettai I had a chance of going to Manambadi. After getting down from the bus I was shocked. The Buddha was not found there. I started searching the Buddha in and around the area and also near the bushes. No trace of Buddha was found there. The local people who noticed me asked me about my search. I informed them about my search of Buddha and also my research on Buddha. They informed me that there were some attempts to steal the Buddha and felt sorry. They said that in order to keep the statue in good condition and shape they placed the Buddha in the Vadabadra Kaliamman temple. I felt very happy on seeing the Buddha in the temple. The statue which was in neglected condition got a suitable place, courtesy the locals. The attempts made by the locals and some private organizations to save the Buddha statue was laudable.  

I express my thanks to Mr Martin of Star Manithaneya Sangamam, Mr Navanith Sethya of Valkkai 2000, NSS Cadets of Govt Women's College and the people of Manambadi.
Symbolic of Harmony, The Hindu, 31.5.2002 
The stolen Buddha statue near Kumbakonam was recovered, Dina Thanthi, Tamil Daily,  4.1.2005
Appeal to protect the Buddha found at Manambadi near Kumbakonam, Dinamalar, Tamil Daily, 16.7.2007

 ----------------------------------------------------------------------------------------------------------------------  
பௌத்த சுவட்டைத் தேடி: மானம்பாடி
முதன்முதலாக மானம்பாடியில் நான் பார்த்த புத்தர் சிலை பராமரிப்பின்றி இருந்தது. தற்போது அச்சிலை அருகிலுள்ள அம்மன் கோயிலில் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. களப்பணியில் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் இந்த புத்தரைப் பார்த்த அனுபவம் பற்றிய தமிழ் வடிவம் இம்மாதம் 1ஆம் தேதி வெளியாகியுள்ளது. 
 ----------------------------------------------------------------------------------------------------------------------
PREACHING OF BUDDHA
HAPPY ARE THE RIGHTEOUS

Here he is happy, hereafter he is happy. In both states the well-doer is happy. "Good have I done" (thinking thus), he is happy. Furthermore, is he happy, having gone to a blissful state.  - The Dhammapada 18

STORY
Sumana, the youngest daughter of Anathapindika, the chief supporter of Buddha, lying on her death-bed, addressed her father as "younger brother" and passed away peacefully. The father was grieved to hear his devout daugter utter such incoherent words at the moment of death. When he mentioned this matter to the Buddha He explained that she addressed him thus because she had attained the second stage of Sainthood-Sakdagami (Once-Returner) while the father had attained only the first stage Sotapatti (Stream-Winner).
(The Dhammapada, Narada Thera, The Corporate Body of the Buddha Educational Foundation, Taiwan, ROC, 1993)

Saturday, 1 March 2014

பௌத்த சுவட்டைத்தேடி : மானம்பாடி


1960
பி.ஆர்.சீனிவாசன் (1960), சிவராமலிங்கம் (1997) உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் மானம்பாடியில் உள்ள புத்தர் சிலையைப் பற்றிக் கூறியுள்ளனர். பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் (French Institute of Pondicherry) தன் தொகுப்பில் இச்சிலையின் புகைப்படத்தைக் கொண்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாட்டு வரலாறு சோழப்பெருவேந்தர் காலம் (1998) என்னும் நூலில் இப் புத்தரைப் பற்றிய குறிப்பு உள்ளது.முதல் களப்பணியின்போது கேட்பாரற்று இருந்த புத்தர் தற்போது வழிபாட்டில் உள்ளதைப் பகிர்வதே இப்பகிர்வு.

ஏப்ரல் 1995
நான் புத்தர் சிலைகளைப் பற்றி விசாரித்தபோது பல அறிஞர்கள் கூறிய இடம் திருப்பனந்தாள் அருகே உள்ள மானம்பாடி. கல்வெட்டறிஞர் கும்பகோணம் திரு சேதுராமன் அவர்களைச் சந்திக்கச் சென்றபோது அவர், கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள எலந்துறை புத்தர் கோயில் தொடர்பான கல்வெட்டு பற்றி விரிவாகக் கூறிவிட்டு மானம்பாடி புத்தர் சிலையைப் பற்றிக் கூறினார். அப்போது அச்சிலையைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.  

அக்டோபர் 1998
மூன்றாண்டுகள் கழித்து அங்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. களப்பணியின்போது என் மகன் பாரத், துணைக்கு வந்தான். எலந்துறையில் புத்தர் கோயில் இருந்ததற்கான சான்றைத் தேடி அலைந்து, பெருஞ்சேரியில் புத்தர் சிலையைப் பார்த்துவிட்டு இருவரும் கும்பகோணம் வந்து சேர்ந்தோம். தஞ்சாவூர் சேருவதற்கு முன்பாக வேறுஏதாவது புத்தர் சிற்பம் உள்ளதா என நான் சிந்தித்தபோது மானம்பாடி நினைவிற்கு வந்தது. என் மகனைப் பார்த்தேன். மறுபடியும் ஒரு புத்தரைப் பார்க்கும் ஆசை அவனுக்கும் வந்துவிட்டது. கும்பகோணம்-பந்தநல்லூர் பேருந்தில்  சோழபுரத்திற்கு அருகேயுள்ள மானம்பாடி சென்றோம். புகைப்படக் கருவியை அவனிடம் கொடுத்துவிட்டேன். அவன் ஆவலோடு புத்தரைப் புகைப்படம் எடுத்தான். அவன் எடுத்த பெருஞ்சேரி புகைப்படம் எனது ஆய்வேட்டில் இடம்பெறும் என்றதும் அவனுக்கு அதிக மகிழ்ச்சி.  நிறைவான பயணத்தை முடித்துவிட்டுத் திரும்பினோம்.
மானம்பாடி புத்தர் (1998), புகைப்படம் : ஜ.பாரத்
சோழ நாட்டில் உள்ள அழகான புத்தர் சிலைகளில் இதுவும் ஒன்று. எங்கும் அடர்ந்த செடிகள். மண்டிக்கிடந்த செடிகளுக்கிடையே புத்தர் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் இருந்தார்.

மே 2002
புத்த பூர்ணிமா தினத்தன்று (26.5.2002) சிலை இருந்த இடம் சுத்தம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

புத்த பூர்ணிமா தினத்தன்று புத்தருக்கு சிறப்புப் பூஜை, நன்றி : The Hindu, 31.5.2002
(இச்செய்தியில் மானம்பாடி புத்தரைப் பற்றி நான் கூறிய கருத்துக்கள் இடம் பெற்றிருந்தன)
ஜனவரி 2005
இச்சிலையைக் களவாட மேற்கொள்ளப்பட்ட முயற்சி புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே முறியடிக்கப்பட்டு, மறுபடியும் மானம்பாடிக்கு வந்து சேர்ந்தது. பழைய இடத்திற்கு வந்த புத்தருக்கு மறுபடியும் உள்ளூர் மக்களால் பூசைகள் நடத்தப்பட்டன.

 சூலை 2007
பின்னர் அந்த இடம் மிகச் சிறப்பாக சில காலம் பராமரிக்கப்பட்டு வந்ததை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பணிகளின்போது காணமுடிந்தது. கேட்பாரற்றுக் கிடந்த அந்த சிலைக்கு கம்பிகளால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது. முட்புதர் மறைந்து சிலை அனைவரும் காணும்படி அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. 


மானம்பாடி புத்தர், புகைப்படம் நன்றி : தினமலர், 16.7.2007
மார்ச் 2010
குத்தாலம், பெருஞ்சேரி, பந்தநல்லூர், சிக்கநாயக்கன்பேட்டை ஆகிய இடங்களில் களப்பணி முடித்துவிட்டு, மானம்பாடி செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பேருந்தைவிட்டு இறங்கி முன்னர் புத்தர் இருந்த இடத்திற்குச் சென்றேன். சிறிய அதிர்ச்சி காத்திருந்தது. முந்தைய களப்பணியின்போது நான் பார்த்த இடத்தில் புத்தர் சிலை இல்லை.  செடிகளோடு மறைந்துவிட்டதா என எண்ணித் தேட ஆரம்பித்தேன். அந்தப் பகுதி முழுவதையும் தேடினேன். எந்தத் தடயமும் இல்லை. நான் அந்த இடத்தில் பல நேரம் தனியாக எதையோ தேடிக் கொண்டிருந்ததைக் கண்ட உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என்னிடம் என் தேடலைப் பற்றி விசாரித்தனர். நான் புத்தர் சிலையைப் பற்றிக் கூறியதும், கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது இடம் மாறியது பற்றியும், ஒரு முறை திருட முயற்சி நடந்தது பற்றியும் கூறி வருத்தப்பட்டனர். சிலையின் நிலையைப் பற்றிக் கேட்டபோது அருகில், எதிர்ப்புறத்தில் உள்ள வடபத்ர காளியம்மன் கோயிலில் இருப்பதாகக் கூறினர். அக்கோயிலில் புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்தது. முதல் களப்பணியின்போது கேட்பாரட்டுக் கிடந்த புத்தர் தற்போது வழிபாட்டில் இருப்பதைக் கண்டதும் மன நிறைவு ஏற்பட்டது. இந்த புத்தரை பாதுகாக்கவும், வழிபாட்டுக்குக் கொணரவும் தனியார் அமைப்புகளும் உள்ளூர் மக்களும் செய்துவரும் முயற்சி பாராட்டத்தக்கதாகும்.

நன்றி
திரு மார்ட்டின் (தலைவர், ஸ்டார் மனிதநேய சங்கமம்), திரு நவநீத் சேத்யா (தலைவர், வாழ்க்கை 2000), அரசு மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் மற்றும் மானம்பாடி கிராம மக்கள்
Symbolic of Harmony, The Hindu, 31.5.2002 
கும்பகோணம் அருகே திருட்டுப்போன புத்தர் சிலை மீட்பு, தினத்தந்தி, 4.1.2005
கும்பகோணம் அருகே மானம்பாடியில் உள்ள புத்தர் சிலையைப் போற்றி பாதுகாக்க கோரிக்கை, தினமலர், 16.7.2007
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தர் அறவுரை 

நல்வினையாளன் இம்மையிலும் இன்புறுகிறான். மறுமையிலும் இன்புறுகிறான். அவன் இருமையிலும் இன்புறுகிறான். நான் இவ்வறம் இயற்றினேன் என எண்ணி மகிழ்கிறான். அவ்வழியிலேயே சென்று மேலும் மகிழ்ச்சியடைகிறான். -தம்ம பதம்  18

சூழல்

சாவத்தியில் அநாதபிண்டிகளின் இளைய மகள்  சமனாதேவி புத்தருக்குப் பணிவிடை செய்வதில் பெருவிருப்பினள். அவளது இறுதிக் காலத்தில் மரணப்படுக்கையில் தன் தந்தையைப் பார்த்து தம்பி என்றழைக்கிறாள். தன் மகள் நல்லறம் பல இயற்றியும் இறுதிக்காலத்தில் சித்தம் கலங்கித் தன்னைத் தம்பி என்றழைத்தாளே என வருந்திய அநாதபிண்டிகன் புத்தரிடம் தன் குறையைத் தெரிவிக்கிறான். புத்தரும், மனிதன் தவநெறியில் அடையவேண்டிய நிலைகளுள் இரண்டாவது நிலையைச் சமனா அடைந்துவிட்டாள் என்றும் முதல் நிலையையே அடைந்துள்ள அநாதபிண்டிகனுக்கு அவன் நிலையை உணர்த்தவேண்டியே தம்பி என்றழைத்தாளென்றும் கூறி இப்பாடலைக் கூறினார்.

(தம்ம பதம், தமிழாக்கம்: நா.செயப்பிரகாசு, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2002)  

-----------------------------------------------------------------------------------------------------------------------

In search of imprints of Buddha: Manambadi, Thanjavur district

The Buddha found at Manambadi was in sitting dhyana posture. During my first field visit the statue was found in a neglected place and was not maintained well. After some time it was maintained and was worshipped. Later the place in which the statue was found was fenced. Now it was under worship in the nearby Vadabadra Kaliamman Temple.   English version of the article will appear on 15th of this month.