Posts

Showing posts from July, 2012

சோழ நாட்டில் புத்தர் சிற்பங்கள் : வழிபாடும் நம்பிக்கைகளும்

Image
   சோழ நாட்டில் புத்தர் சிற்பங்களுக்கு வழிபாடு நடத்தப்படுவதைக் களப்பணியின்போது காணமுடிந்தது. அவ்வாறு வழிபாடு நடத்தப்படும் வழிபாடுகள் பற்றியும், புத்தர் தொடர்பாக மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைகள் பற்றியும் அறிந்துகொள்ள இம்மாதக் களப்பணியில் இணைந்துகொள்ள அழைக்கிறேன்.  அனைத்து இடங்களுக்கும் ஒரே முறை செல்வது சாத்தியமாகாது என்ற நிலையில் குறிப்பிட்ட சில இடங்களுக்கு மட்டுமே உங்களைத் துணைக்கு அழைக்கிறேன், வருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்.    அய்யம்பேட்டை, ஆயிரவேலி அயிலூர், உள்ளிக்கோட்டை, ஒகுளூர், கரூர், கிள்ளியூர், பட்டீஸ்வரம், பரவாய், புட்பவனம், புத்தமங்கலம், புதூர், பெரண்டாக்கோட்டை, பெருஞ்சேரி, மங்கலம், மன்னார்குடி, மானம்பாடி,  விக்கிரமங்கலம், விக்ரமம், வெள்ளனூர் உள்ளிட்ட பல இடங்களில் புத்தருக்கு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அய்யம்பேட்டையில் முனீஸ்வரன் என்றும், பெரண்டாக்கோட்டையில் சாம்பான் என்றும், பெருஞ்சேரியில் ரிஷி என்றும் புத்தரை வழிபடுகின்றனர். ஒகுளூர்    பெரம்பலூர் அருகே ஒகுளூர் என்னும் சிற்றூரில் அமர்ந்த நிலையில் தியானகோலத்தில் ஒரு புத்தர் சிற்பம் உள்ளது. இப்பகுதியைச் சார்ந்தோர் பெரும