Posts

சமண சுவட்டைத் தேடி : நாட்டாணி

Image
மணலூரில்   கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலையைப் பற்றி  எழுதியிருந்ததைக் கண்ட தஞ்சாவூர் அருகேயுள்ள நாட்டாணி கிராமத்தைச் சேர்ந்த  விஜயகுமார் என்பவர் சரஸ்வதி மகால் நூலகத் தமிழ்ப்பண்டிதர் மணி. மாறனிடம் தன் ஊரில் ஒரு புத்தர் சிலை இருப்பதாகக் கூறியிருந்தார். அச்சிலையைக் காண்பதற்கான நாளை எதிர்பார்த்தோம்.   14 பிப்ரவரி 2015  காலை 10.00 தஞ்சாவூரிலிருந்து நானும் மணி மாறனும் நாட்டாணி சென்றோம். செல்லும்போதே மனதுள் ஒரு எண்ணம். சுமார் கால் நூற்றாண்டாக மேற்கொள்ளப்பட்டுவருகின்ற ஆய்வில் இவ்வாறாக ஒரு புத்தர் சிலையைப் பற்றிய நாளிதழ் செய்தி வந்த ஓரிரு நாள்களிலேயே மற்றொரு சிலையைப் பார்க்கச் செலவது இதுவே முதல் முறை. நாட்டாணியை அடைந்ததும் நண்பர் விஜயகுமாரைத் தொலைபேசியில் மணி.மாறன் தொடர்புகொண்டார். அவர் சிறிது நேரத்தில் வருவதாகக் கூறினார். அவருக்காகக் காத்திருக்கும் நேரத்தில் நாட்டாணியைச் சேர்ந்த நண்பர்கள் வந்தனர்.  அவர்களுடன் சிலை இருக்கும் இடத்தினைப் பற்றி விசாரித்தோம். பேசிக்கொண்டே, சிலையைத் தேட ஆரம்பித்தோம். நாங்கள் செல்லும் பாதை முழுக்க முழுக்க முட்கள் அடர்ந்...

மீசை வைத்த புத்தர்! சோழ நாட்டில் புத்தர் சிலைகளைத் தேடி ஒரு வாழ்நாள் பயணம்

Image
மீசை வைத்த புத்தர்! சோழ நாட்டில் புத்தர் சிலைகளைத் தேடி ஒரு வாழ்நாள் பயணம்! புத்தர் சிலைகளைத் தேடத் தொடங்கியபோது தெரிய வில்லை, அந்த ஆய்வு இந்த அளவுக்கு என் வாழ்க்கையை அர்த்தபூர்வமாக்கும் என்பது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக நீளும் ஒரு பயணம்! வயற்காடுகள், ஆற்றங்கரைகள், இன்றைய நவீனத்தின் வெளிச்சம் அவ்வளவாகப் படாத கிராமங்கள் என்று சோழநாட்டின் மூலைமுடுக்குகளில் எல்லாம் பயணித்திருக்கிறேன். அந்தப் பயணத்தின் விளைவாகக் கண்டுபிடித்தவைதான் 65 புத்தர் சிலைகள். எதிர்கொண்ட இனிய அனுபவங்கள் மட்டுமல்ல, எத்தனையோ தோல்விகளும் ஏமாற்றங்களும் அலைச் சல்களும் சேர்ந்து இந்தக் கண்டுபிடிப்புகளை எனக்கு அவ்வளவு முக்கியமாக ஆக்குகின்றன. புத்தர் சிலை களைக் கண்டுகொண்ட தருணங்களைப் போலவே புத்தர் சிலைகள் என்று நம்பப்பட்ட சிலைகள் புத்தர் சிலைகள் அல்ல என்று கண்டறிந்த தருணங்களும் முக்கிய மானவை. தொடங்கிய இடம் 1993-ல் பௌத்தம் தொடர்பான ஆய்வில் கால்பதித்தபோது, ஆய்வுகள்தானே சர்வசாதாரணமாக முடித்துவிடலாம் என்ற எண்ணமே எனக்கு இருந்தது. இலக்கியச் செய்திகளையும், தத்துவக் கருத்துகளையும் ஒருங்கிணைத்து நிறைவுசெய்துவிடலாம் என்ற...

பௌத்த சுவட்டைத் தேடி: மணலூர்

Image
சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூவினைத் தொடங்கி ஐந்தாவது ஆண்டு தொடங்கும் இவ்வினிய வேளையில் அண்மையில் அய்யம்பேட்டை அருகில் மணலூரில் திரு மணி மாறன் அவர்களுடன் மேற்கொண்ட களப்பணியின்போது கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலையைக் கண்ட அனுபவத்தை இப்பதிவில் காண்போம்.   10 ஜனவரி 2015 சரசுவதி மகால் தமிழ்ப்பண்டிதர் நண்பர் திரு மணி.மாறன் தொலைபேசியில் என்னிடம் அய்யம்பேட்டை அருகே ஒரு புத்தர் சிலை இருப்பதாக மணலூரைச் சேர்ந்த ஆசிரியர் திரு சேதுராமன் தெரிவித்ததாகக் கூறி அங்கு செல்வது தொடர்பாக என்னை அழைத்தார். உடனே செல்லலாம் என்றபோது அவரது நேரம் அறிந்து கேட்டுத் தெரிவிப்பதாகக் கூறினார். எனக்கு அது புத்தரா, சமணரா என ஒரு ஐயம் எழ ஆரம்பித்தது. ஏனெனில் பலர் இரு சிலைக்கும் வித்தியாசம் தெரியாமல் அவ்வாறு கூறிவிடுகின்றனர். உரிய நாளை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். 17 ஜனவரி 2015 அவருடன் பல முறை தொடர்பு கொண்டு உரிய நாளை உறுதி செய்துகொண்டோம். அவருடன் புறப்பட்டேன். புறப்படுவதற்கு முன்பாக முன்பு அப்பகுதிகளில் நான் பார்த்த புத்தர் சிலைகளைப் பற்றிய குறிப்புகளை எடுத்துக்கொண்டேன்.  தஞ்சாவூரிலிருந்து அய்யம்பேட்...

சமண சுவட்டைத் தேடி : திருநாகேஸ்வரம்

Image
டிசம்பர் 1996 பௌத்த ஆய்விற்குப் பதிவு செய்த முதல் பௌத்தம் தொடர்பான விவரங்களைக் குறித்துக்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.  அப்போது, தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றும்  நண்பர் திரு நா. ராமகிருட்டிணன் (சிறப்பு நிலைத் தட்டச்சர்) திருநாகேஸ்வரம்- திருவிடைமருதூர் அருகே சன்னாபுரம் என்ற ஊருக்கு அருகில் புத்தர் சிலை உள்ளதாகக் கூறிக்கொள்கிறார்கள் என்றும், திருநாகேஸ்வரம் ராகுஸ்தலம் எனப்படும் கோயிலில் நான்கைந்து புத்தர் சிலைகளோ, சமணர் சிலையோ இருப்பதாகக்  கூறிக்கொள்கிறார்கள் என்றும் கூறியிருந்தார். சன்னாபுரம் சென்று சிலைகளைத் தேடினேன். எங்கும் சிலை இல்லை. சமணபுரம் என்பது சன்னாபுரம் ஆகிவிட்டது என்று அப்பகுதியில் கூறினர். போதிய நேரமின்மையால் திருநாகேஸ்வரம் கோயிலுக்குச் செல்ல முடியவில்லை.  ஆகஸ்டு 1998 காலை மன்னார்குடிக்கு சமணக்கோயிலுக்குப் பயணித்தேன். அங்கிருந்த புத்தர் சிலையைப் பார்க்கச் சென்றபோது திரு ஜெ.சந்திரமோகன் அறிமுகமானார். அவர், கூறிய செய்திகளில் ஒன்று திருநாகேஸ்வரம் சிவன் கோயிலில் அம்மன் சன்னதியில் சமணர் சிலை உள்ளது என்பதாகும்.  தகவலை உறுதி செய்துகொண்டேன்...