சமண சுவட்டைத் தேடி: வெள்ளாளவயல்
புதுக்கோட்டை, தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனர் திரு ஆ.மணிகண்டன் குழுவினருடன் 16 ஆகஸ்டு 2025இல் மேற்கொண்ட களப்பணி. பயணம் தொடரும்...
தஞ்சாவூர் மாவட்டத்தில் பல இடங்களில் புத்தர் சிலைகளைப் பார்க்கச் சென்று சமண தீர்த்தங்கரர் சிலைகளைப் பார்த்துள்ளேன். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடிப்பட்டியில் புத்தர் சிலையைப் பார்க்கச் சென்று, சமண தீர்த்தங்கரர் சிலையைப் பல ஆண்டுகளுக்குமு முன்னர் பார்த்துள்ளேன். தற்போது ஒரு அழகான சமண தீர்த்தங்கரர் சிலையைப் பார்த்தது நினைவில் நிற்கும் அனுபவம் ஆகும். இச்சிலையைக் காணச் சென்றபோது பார்த்த பிறிதொரு சிலையைப் பற்றி அடுத்த பதிவில் காண்போம்.
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், வெள்ளாளக்கோயிலில் கண்டுபிடிக்கப்பட்ட மகாவீரர் சிலை தொடர்பான நாளிதழ் செய்திகள்.
-------------------------------------------------------------------------------------------
நன்றி: திரு ஆ.மணிகண்டன் குழுவினர்,
நாளிதழ்கள்
-------------------------------------------------------------------------------------------
29 ஆகஸ்டு 2025இல் மேம்படுத்தப்பட்டது.
தகவல்கள் நன்று. தொடரட்டும் உங்கள் களப்பணி.
ReplyDelete