நூல் வடிவம் பெறும் சோழ நாட்டில் பௌத்தம்

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் (B.Jambulingam, Buddhism in Tamil Nadu with special reference to Thanjavur District, Madurai Kamaraj University, Madurai, 1995) ஆய்வினையும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வினையும் (பா.ஜம்புலிங்கம், சோழ நாட்டில் பௌத்தம், தமிழ்ப் பல்கலைக்கழகம், 1999) நிறைவு செய்து, தொடர்ந்து இரண்டு மாமாங்கத்திற்கும் மேலாக களப்பணி மேற்கொண்டு வரும் நிலையில் என் ஆய்வு மேம்படுத்தப்பட்டு நூல் வடிவம் பெறுகிறது என்பதைப் பகிர்வதில் மகிழ்கின்றேன். 

பணியாற்றிக்கொண்டே களப்பணியினை மேற்கொண்டபோது எதிர்கொண்ட சூழல் சற்றே சிரமமானது. இருப்பினும் எந்த நிலையிலும் ஆய்வேட்டில் விடுபாடு இருக்கக்கூடாது என்பதை மனதில்கொண்டு பல இடங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை களப்பணி சென்றேன். அவ்வப்போது பெற்ற அனுபவங்களை என் வலைப்பூவில் பகிர்ந்ததோடு, அதில் மாற்றங்களோ, மேம்பாடோ மேற்கொள்ளும்போது அதனை பதிவின் இறுதியில் தரும் முறையைத் தொடர்ந்து கடைபிடிக்கிறேன்.

நிர்வாகப் பணியாளரான என்னை ஆய்வாளராக உருவாக்கிய தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கும்,  ஆய்வில் சேர்ந்த முதல் இன்றுவரை என் முயற்சிக்குத் துணை நிற்கும் அறிஞர்கள், ஆய்வாளர்கள், நண்பர்கள், ஊடகத்தினர், தகவலாளர்கள், என் குடும்பத்தார் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

20 நவம்பர் 2022இல் நூலின் படியை பதிப்பாளர் திரு சுகவன முருகன் (புது எழுத்து, அலைபேசி 98426 47101) அவர்களிடம் எங்கள் இல்ல நூலகத்தில் பெற்ற தருணங்கள் என்றும் நினைவில் இருக்கும். நேரில் வந்து நூலின் படிகளைத் தந்த அவருடைய பெருமனது போற்றத்தக்கது. சிறப்பாக வடிவமைத்து நூலாக்கம் செய்த அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. தொடர்ந்து அதன் ஆங்கிலப்பதிப்பினையும் சிறப்பாக அவரே பதிப்புத்து என் முயற்சிக்குத் துணைநின்றார்.  நூலின் படிகளைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கும், கும்பகோணம் சிவகுருநாதன் நூலகத்திற்கும், அறிஞர்களுக்கும், நான் பயின்ற கல்லூரிக்கும், பள்ளிக்கும், நண்பர்களுக்கம் நேரில் கொடுத்து அவர்களுடைய வாழ்த்துகளைப் பெற்றேன்.


எங்கள் இல்ல நூலகத்தில் பதிப்பாளர் புது எழுத்து திரு சுகவனமுருகன் அவர்களிடமிருந்து 
நூலைப் பெறல் (20.11.2022)


சென்னையில் எங்கள் மூத்த மகன் பாரத்  இல்லத்தில் பதிப்பாளர் புது எழுத்து 
திரு சுகவனமுருகன் அவர்களிடமிருந்து நூலின் ஆங்கிலப்பதிப்பைப் பெறல் (7.7.2024)


முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன்


பேராசிரியர் சோ.ந.கந்தசாமி, உடன் எங்கள் மகன்கள் பாரத், சிவகுரு 


தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன்
அவர்களிடம் என் நூலுடன், என் குடும்பத்தார் எழுதிய நூல்களையும் வழங்கல்
 

பேராசிரியர் க.பாஸ்கரன்


முனைவர் மணி.மாறன் 


முனைவர் கோ.தில்லை கோவிந்தராஜன் 

முனைவர் வீ.ஜெயபால் 

திரு கரந்தை ஜெயக்குமார்


முனைவர் சீமான் இளையராஜா


முனைவர் ராஜா முகமது 


1970களின் இடையில் தொடங்கி நான் சென்று வரும் 
கும்பகோணம் சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையத்திற்கு என் நூலை வழங்கல்
பொறுப்பாளர் திரு தயாளன் மற்றும் நூலகர் சரண்யா 

கும்பகோணம் நண்பர் சிற்பக்கலைஞர் ராஜசேகரன் 

  
தொல்லியல் அறிஞர் திரு கி.ஸ்ரீதரன் (சென்னை)

தொல்லியல் அறிஞர் திரு அனந்தபுரம் கோ. கிருட்டினமூர்த்தி (சென்னை)


1975-79இல் நான் பயின்ற கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரி (தன்)
முதல்வர் முனைவர் நா.தனராஜன்  (13 மார்ச் 2023) 

வரலாற்றறிஞர் திரு அய்யம்பேட்டை செல்வராஜ் (13 மார்ச் 2023)


1972-75இல் நான் பயின்ற கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசினர் மேல்நிலைப்பள்ளி 
தலைமையாசிரியர் திரு சாரதி (23 மார்ச் 2023)


தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைப்பதிவாளர் 
திரு இரா.சுப்பராயலு (2 ஜுன் 2023)



கும்பகோணம் நண்பர் திரு சீ. தீனதயாளன் (2 ஜுலை 2023)

1964-72இல் நான் பயின்ற கும்பகோணம் கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி பள்ளியின் செயலர்
திரு லெட்சுமணபாபுவிடம் நூலை வழங்கல். உடன் நண்பர் இராஜசேகரன்
 (6 ஜனவரி 2025)


எங்கள் மூத்த மகன் ஜ.பாரத், முகநூல் பதிவு, 20 நவம்பர் 2022
----------------------------------------------------------------
ஆய்வேடுகள்
----------------------------------------------------------------

  • Buddhism in Tamil Nadu with special reference to Thanjavur District, M.Phil., Dissertation, Madurai Kamaraj Univesity, Madurai, 1995
  • சோழ நாட்டில் பௌத்தம், முனைவர் பட்ட ஆய்வேடு, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1999
  • Buddhism in the Cola country, Project, Nehru Trust for the Indian Collections at the Victoria & Albert Museum, New Delhi, 2002

சோழ நாட்டில் பௌத்தம் (தமிழிலும், ஆங்கிலத்திலும்)

  • சோழ நாட்டில் பௌத்தம், புது எழுத்து, 2/203, அண்ணா நகர், காவேரிப்பட்டிணம், 635 112, அலைபேசி 9842647101, மின்னஞ்சல்: editorpudhuezuthu@gmail.com, செப்டம்பர் 2022, ரூ.1000
  • Buddhism in Chola Nadu, Pudhu Ezuthu, 2/203, Anna Nagar, Kaveripattinam, 635 112, Mobile 9842647101, email: editorpudhuezuthu@gmail.com, 2023. Rs.1500

 சோழ நாட்டில் பௌத்தம் (சிங்கள மொழியில்)

சென்னைப் பன்னாட்டுப் புத்தகத் திருவிழா 2025இல், என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் நூலைச் சிங்கள மொழியில் மொழிபெயர்க்க, புது எழுத்து பதிப்பாளர் திரு சுகவனமுருகனும் இலங்கை எக்ஸ்போகிராபிக் புக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன இயக்குநர் திரு பிரதீப் சமரநாயகேயும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளனர் என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.


4.10.2025இல் மேம்படுத்தப்பட்டது.

Comments

  1. தங்களது பணி மேலும் சிறக்கவும், நூல் வடிவம் பெற்றமைக்கும் வாழ்த்துகள்.

    150-ஆவது பதிவுக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. அருமை... வாழ்த்துகள் ஐயா...

    ReplyDelete
  3. அருமை ஐயா
    தங்களின் பணி தொடர வாழ்த்துகள்

    ReplyDelete
  4. தங்களின் பணி தொடர வாழ்த்துகள்

    ReplyDelete
  5. Anonymous05 May, 2023

    வணங்குகிறேன் ஐயா

    ReplyDelete

Post a Comment