பௌத்த சுவட்டைத் தேடி : மங்கலம்
மே 1998 8.5.1998இல் வந்த தி இந்து நாளிதழில் என் ஆய்வுப்பகுதியில் காணப்படுகின்ற ஒரு புத்தர் சிலையைப் பற்றிய செய்தியைக் கண்டேன். இதுவரை நூல்களையும், கட்டுரைகளையும் சான்றுகளாகக் கொண்டிருந்த எனக்கு முதன்முதலாக நாளிதழ் செய்தியும் சான்றாக அமைந்ததைக் கண்டேன். அன்று வந்த செய்தி (10th century Buddha statue to get separate shrine, The Hindu , 8.5.1998) மூலமாக, திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் மங்கலம் என்னுமிடத்திலுள்ள அரவாண்டியம்மன் கோயிலில் பொ.ஆ.10ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு புத்தர் சிலை உள்ளதாகவும், அதை வைப்பதற்காக தனியாக ஒரு சன்னதி கட்டப்பட்டு வருவதாகவும் வரலாற்றறிஞர் திரு கி.ஸ்ரீதரன் கூறியிருந்தார். அந்தப் புத்தர் மீசையோடு இருந்ததும், அது நாளிதழ்களில் செய்தியாக வந்ததும் நினைவில் நிற்கும் அனுபவம். ஜூன் 1998 செய்தி வந்த ஒரு மாதத்திற்குப் பின்னர் தஞ்சை மாவட்டத்தில் தழைத்த பௌத்தம் என்ற தலைப்பில் என் உரையினைப் பதிவு செய்வதற்காக திருச்சி, அகில இந்திய வானொலி நிலையத்திற்குச் சென்றேன். பதிவு முடிந்தபின் அங்கிருந்து மங்கலம் செல்லத் திட்டமிட்டு, திருச்சியிலிருந்து முசிறிக்குச் சென்ற...