Friday, 1 September 2017

சோழ நாட்டில் பௌத்தம் : மேற்கோள்கள், பதிவுகள்

பௌத்த ஆய்வு தொடர்பாக மேற்கொண்டு விவரங்களை தளங்களில் தேடியபோது பிற அறிஞர்கள் என் ஆய்வினை மேற்கோளாகத் தங்களுடைய நூல்களிலும், கட்டுரைகளிலும் தந்துள்ளதைக் கண்டேன். பல ஆய்வாளர்கள் ஆய்வு தொடர்பாக என்னைக் காண வந்தபோதிலும் 2002இல் வெளிநாட்டிலிருந்து (கொரியா/ஜப்பான்) என்னைக் காண வந்த ஓர் ஆய்வாளர் எனது ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்ட ஆய்வேடுகளை, தான் மேற்கொண்டு வருகின்ற பௌத்த ஆய்விற்காகப் பார்த்து வியந்தார். அப்பொழுது முனைவர் பட்ட ஆய்வேடு தமிழில் இருந்ததைப் பார்த்து வியந்து, ஆங்கிலத்தில் இருந்தால் தனக்கும் தன்னைப் போன்றோருக்கும் உதவியாக இருக்குமே என்ற ஒரு கருத்தினை முன்வைத்தார். அவரது விருப்பப்படியும் பிற நண்பர்களின் விருப்பப்படியும், எழுதி புதுதில்லியிலுள்ள நேரு டிரஸ்ட் மூலமாக உதவி பெற்று  என் ஆய்வேட்டினை ஆங்கிலத்தில் எழுதினேன். எனது ஆய்வேட்டினை மேற்கோளாக அவர் தன் கட்டுரையில் பதிவு செய்து அதனை எனக்கு அனுப்பியிருந்தார். அவரைத் தொடர்ந்து பல நண்பர்களும், அறிஞர்களும் தந்திருப்பினும் சிலவற்றை இங்கு பகிர்வதில் மகிழ்கிறேன். 


ஆசிரியர் : Fukuroi Yuko
கட்டுரை/நூல் "The Latest Buddhist Art in South India - A Report on the Buddhist Sculptures from Tamil Nadu", INDO-KOKO-KENKYU-Indian Archaeological Studies, Volume 23
பதிப்பகம் : Indian Archaeological Society, Tokyo, June 2002
ஆசிரியர் : D.Ravikumar
கட்டுரை/நூல் "Waiting to loose their patience", Dalits in Dravidian Land (Tr S.Anand)
பதிப்பகம் Navayana

ஆசிரியர் : Ajaysekher
கட்டுரை/நூல் "Buddhism in Tamil Nadu" 
வலைப்பூ : Margins
நாள் : August 2, 2015


ஆசிரியர் : Gauri Parimoo Krishnan
கட்டுரை "Roots and legacy of the Art of Nalanda as seen at Sri Vijaya", 
நூல் Nalanda, Sri Vijaya and Beyond: Re-exploring  Buddhist Art in Asia,
பதிப்பகம் Asian Civilizations Museum, 2008 in conjunction with the special exhibition 'On the Nalanda Trial: Buddhism in India, China and South East Asia', 2016, pp.198-199
ஆசிரியர் : R.Azhagarasan
கட்டுரை "The rupture within: Manimekalai's polemics with Buddhism"
நூல் Heritage and Ruptures in Indian Literature, Culture and Cinema
          Ed: Cornelius Crowley, Geetha Ganapathy-Dore, Michel Naumann
பதிப்பகம் Cambridge Scholars Publishing, 2017. p.127  (Ph.D.thesis cited)
 


என் கண்டுபிடிப்புகள் தொடர்பான நாளிதழ் செய்திகளை கண்டுபிடிப்புகள் நாளிதழ்கள் நறுக்குகள் என்ற இணைப்பிலும், என் பேட்டிகளை பேட்டிகள் என்ற இணைப்பிலும் காணலாம். பிற தளங்களில் வந்துள்ள செய்திகளையும், மேற்கோள்களையும், கட்டுரைகளையும் அப்போது கண்டேன். அவற்றில் சிலவற்றைக் காண்போம்.   
அவ்வப்போது தளங்களில் ஆதாரங்களைத் தேடும்போது இவ்விவரங்களைக் காணமுடிந்தது. முன்னர் பிடிஎப் வடிவில் பெற்ற கட்டுரைகள் அடிப்படையில் அந்தந்த நூலின் அட்டையை தற்போது இணைத்துள்ளேன். தற்போது அவற்றைத் தேடியபோது கிடைக்கவில்லை. அண்மையில் இலங்கையைச் சேர்ந்த ஆய்வாளர் என் ஆய்வினைப் பற்றிய விவரங்களைக் கேட்டு தன் நூலில் மேற்கோளாகக் காட்டி, அதன் விவரங்களை எனக்கு அனுப்பியிருந்தார். ஆய்வினை முக்கியத்துவத்தை இவை போன்ற நிகழ்வுகள் எனக்கு உணர்த்துகின்றன. 

இந்த ஆய்வின் தடம் பதித்தது முதல் எனக்குத் துணை நிற்கும் வலைத்தளங்களுக்கும், ஊடக மற்றும் தொலைக்காட்சி நண்பர்களுக்கும், அறிஞர் பெருமக்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

1 செப்டம்பர் 2017 மதியம் பதிவு மேம்படுத்தப்பட்டது.

11 comments:

 1. முனைவர் அவர்களுக்கு, உங்கள் பணி மகத்தானது. கட்டுரையில் குறிப்பிட்டுள்ள, கண்டுபிடிப்புகள் (நாளிதழ்கள்) நறுக்குகள் என்ற இணைப்பில் உள்ளவற்றையும் படித்தேன். நிறைய ஊர்கள்; நல்ல களப்பணி..

  தினமணிக்கான பேட்டியில் கண்காணித்தோமா போனோமா என 'சாமர்த்தியமாக' இல்லாமல், புத்தரைத் தேடி அலைந்த, தமிழக பௌத்த வரலாற்றுக்கு தாங்கள் செய்த பங்களிப்பு பற்றி அவர்கள் சிறப்பாகவே பாராட்டி இருக்கின்றனர். உங்கள் பேட்டியிலும் பல குறிப்புகள்.

  பாராட்டுகள். மற்றும் இந்த பணி இனிதே தொடர்ந்திட வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. முனைவர் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்ததுகள் தொடரட்டும் தங்களது பணி.

  ReplyDelete
 3. அறிஞர்களால் கொண்டாடப்படும் ஆய்வறிஞராக மாறியுள்ளீர்கள்.
  மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஜம்பு.

  ReplyDelete
 4. ஐயாவிற்கு வணக்கங்கள்.

  இத்தனை பெருமைகளுக்கு சொந்தக்காரராகிய உங்களை பதிவுலக வாயிலாக அறிந்தவன் என்ற பெருமையும் தொடர்ந்து என்னுடைய பதிவுகளை பொறுமையுடன் வாசித்து கருத்துரைக்கும் அளவிற்கு உங்களோடு எனக்குள்ள தொடர்பையும் எண்ணி பூரிப்படைகிறேன்.

  உங்கள் பணி இன்னும் பலருக்கு பாடமாகும் என்பதில் ஐயமின்றி ஐயாவிற்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தலை வணங்கி தெரிவிக்கின்றேன்.

  கோ

  ReplyDelete
 5. வாழ்த்துகள் முனைவரே! த ம 5

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் ஐயா...

  ReplyDelete
 7. வாழ்த்துகள் ஐயா! தங்களின் பணி தொடரட்டும்!

  ReplyDelete
 8. பரிவை குமார் தளத்தில் என்னைப் பற்றி என்று ஒரு பக்கம் ஒதுக்கி நண்பர்கள் ஒவ்வொருவரையும் எழுதச் சொல்லியிருந்தார் அல்லவா? நானும் அந்தப் பக்கத்தில் அவர் கொடுத்த வாய்ப்பின் மூலம் எழுதியிருந்தேன். அதில் வந்த உங்கள் என்னைப்பற்றி என்பதனையும் படித்தேன். அன்றே எழுத வேண்டும் என்று நினைத்தேன். அலைபேசி வாயிலாக படித்த காரணத்தால் என்னால் அன்று எழுத முடியவில்லை. கடந்த சில மாதங்களாகவே தொடர் வேலைப்பளூ காரணமாக யார் பதிவிலும் பின்னூட்டம் கொடுக்க முடியவில்லை. இந்தப் பதிவைப் படித்ததும் எழுத வேண்டும் என்று தோன்றியது.

  உங்களின் அந்தப் பதிவில் நேரத்தை எந்த அளவுக்கு நேர்த்தியாக பயன்படுத்துவீர்கள் என்று சொல்லியிருந்தீங்க. உங்களை விழாவிலும் சந்தித்துள்ளேன். அன்றே மனதிற்குள் உங்களைப் பற்றிய சித்திரம் உருவானது. இந்தப் பதிவைப் பார்த்ததும் முழுமையான மரியாதை உருவானது.

  நம் நாட்டில், குறிப்பாக தமிழ்நாட்டில் புத்திசாலித்தனமாக சமூகத்திற்காக அடுத்து வரும் தலைமுறைக்காக உழைப்பவர்களின் உழைப்பு அனைத்தும் நாம் மறைந்தபிறகே பின்பே அடையாளம் காணப்படும். அது தமிழர்களின் தலைவிதி என்றும் கூட சொல்லலாம். எப்படியே யாரோ ஒரு வெளிநாட்டு நபர் உங்களை அங்கீகாரம் கொடுத்து இருப்பதே எனக்கு அந்த அளவுக்கு திருப்தியைத் தந்துள்ளது.

  எழுதுபவர்கள், உழைப்பவர்கள் எவராக இருந்தாலும் எப்போதும் நான் சொல்வது சோர்வில்லாமல் உங்கள் கடமையை மட்டும் எப்போதும் செய்து கொண்டேயிருங்க என்பேன்.
  உங்களுக்கும் அதே. நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. வாழ்த்துகள் த.ம. வாக்குடன்

  ReplyDelete
 10. Mr.K.Srinivasan (thro email: kanvas3@yahoo.co.in)
  I am very happy to hear that your Citation Index is more than enough. I know very well that the Citation Index is very important for professorship. I am really very proud of you that you’re an eminent scholar and also a good academician having knowledgable person in all levels. It is true. Your professorship will enhance the forthcoming society. I think, you are a role model for a good professor and for active academicians. Everybody should follow your service without any hesitation. Your services will always appreciate by one and all. I wish you all success.

  ReplyDelete