Buddhism and Tamil : Mayilai Seeni Venkatasamy (Tr) S.Thillainayagam et al

என் முனைவர்ப்பட்ட ஆய்விற்கு முதன்மை ஆதாரமாக நான் பயன்படுத்திய நூல்களில் முக்கியமானது பௌத்தமும் தமிழும் நூலாகும். அண்மையில் வெளியாகியுள்ள அந்நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பில் என்னுடைய கட்டுரை இடம்பெற்றுள்ளது. 

இலண்டன் பல்கலைக்கழக முனைவர்ப்பட்ட ஆய்வாளரான (Doctoral candidate  at Goldsmiths, University of London) திரு ஆதவன் பழனி, சில மாதங்களுக்கு முன் என்னைத் தொடர்பு கொண்டார். வரலாற்றறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களின் பௌத்தமும் தமிழும் மொழிபெயர்ப்பு ஆங்கிலத்தில் வெளிவரவுள்ளதாகவும், அப்பணியில் பிறருடன் தானும் இணைந்துள்ளதாகவும் கூறி, அந்நூலின் பின்னிணைப்புகளில் பௌத்தம் தொடர்பான என்னுடைய ஆங்கிலக்கட்டுரை இடம்பெற இசைவினைக் கேட்டிருந்தார். நானும் இசைவினைத் தெரிவித்திருந்தேன்.



தற்போது அந்நூல் (Buddhism and Tamil, Mayilai Seeni Venkatasamy, Translated by S.Thillainayagam, Aadhavan Pazhani, and G.Udhayaraj, Routledge, I Edition, 2025) வெளிவந்ததையும், அதில் என் கட்டுரை (Buddha statues in the Chola country, pp.133-139) இடம்பெற்றிருப்பதையும் அறிந்தேன். அந்நூலின் அன்பளிப்புப்படியை எனக்கு அனுப்புவதாக அவர் கூறியுள்ளார். நூலின் படியை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

-------------------------------------------------------------------------------------------
நன்றி: திரு ஆதவன் பழனி உள்ளிட்ட மொழிபெயர்ப்பாளர்கள், 
Routledge
-------------------------------------------------------------------------------------------

Comments

Post a Comment