சமண சுவட்டைத் தேடி : மீண்டும் கவிநாடு

அக்டோபர் 2013இல் புதுக்கோட்டை அருகே சமணர் சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. முனைவர் சந்திரபோஸ் அவர்கள் பார்க்கச் சென்றபோது தலையுடன் இருந்த சிலை, சில நாள்கள் கழித்து அவரோடு நான் சென்றபோது தலையில்லாமல் இருந்தது. அந்த சிலை புத்தர் சிலை என்று கூறப்பட்டு, பின்னர் களப்பணியின்போது சமண தீர்த்தங்கரர் என்று உறுதி செய்யப்பட்டது. அந்த சிலையின் கண்டுபிடிப்பு தொடர்பான அனுபவங்களை பௌத்த சுவட்டைத் தேடி : கவிநாடு என்ற தலைப்பில் முன்னர் வாசித்துள்ளோம்.


1 அக்டோபர் 2017 
சிலையின் தலைப்பகுதி புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டதை திரு கஸ்தூரிரங்கன் அவர்களின் முகநூல் பதிவு வழியாக அறிந்தேன். தொலைபேசிவழி தொடர்பு கொண்டு அவருக்கும் மரபு நடை குழுவினருக்கும் நன்றி தெரிவித்தேன். 


அக்டோபர் 2017இல், இச்சிலை புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டது போல செய்தி வெளியாகியிருந்தது. செய்தி நறுக்குகளை முகநூல் பக்கங்களிலும் காணமுடிந்தது. முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட செய்தியைப் பற்றிய விவரங்களோ, மேற்கோளோ இவற்றில் காணப்படவில்லை.


தி இந்து, 1 அக்டோபர் 2017

புதிய தலைமுறை, 1 அக்டோபர் 2017

தினமணி, 2 அக்டோபர் 2017

தினகரன், 1 அக்டோபர் 2017

 Indian Express

இச்சிலை 2013இல் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான செய்தி மரபு நடை குழுவினருக்கு தெரிவிக்கப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட செய்தி மறுபடியும் நான்கு ஆண்டுகள் கழித்து வந்தபோதிலும், அதனைப் பாதுகாக்க மரபு நடை குழுவினர் மேற்கொண்டுள்ள முயற்சி போற்றத்தக்கதாகும்.

1993 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கள ஆய்வின்போது 16 புத்தர், 13 சமண தீர்த்தங்கரர் சிலைகளைக் கண்டுபிடித்தபோதிலும் ஒரு சில சிலைகளே பாதுகாப்பான இடத்திற்கும், அருங்காட்சியகத்திற்கும் சென்று சேர்வதை அறியமுடிகிறது. அந்த வகையில் இச்சிலையின் தலைப்பகுதி அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டதை அறிந்து மகிழ்கின்றேன். விரைவில் முழு பகுதியையும் ஒப்படைக்க அவர்கள் முயற்சி எடுத்துக் கொண்டிருப்பதாகக் கூறினர். வரலாற்றில் நம்மவர் கொண்டுள்ள எல்லையற்ற ஆர்வத்தையும், மக்களுக்கு அதனைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஈடுபாட்டையும் இதன் மூலமாக உணரமுடிகிறது. இந்த தலைப்பகுதி அருங்காட்சியகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதற்குத் துணை நின்ற அனைவருக்கும் ஓர் ஆய்வாளன் என்ற நிலையில் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிலையின் உடல் பகுதியினை அருங்காட்சியகத்தில் சேர்க்கும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

கவிநாடு மரபு நடையின்போது குழுவினரால் மீட்கப்பட்ட  சமணர் சிலை 2013லேயே கண்டுபிடிக்கப்பட்டது என்று தென்னகத் தொல்லியல் ஆய்வுக்கழகத்தார் தம் தளத்தில் பகிர்ந்துள்ளனர்.


14 அக்டோபர் 2024இல் வெளியான நாளிதழ் செய்தியில் புதுகை கண்மாய்க்குள் கிடக்கும் தீர்த்தங்கரர் சிலை என்ற தலைப்பில் செய்தி வெளியானதைக் காணமுடிந்தது.



-------------------------------------------------------------------------------------------
நன்றி:  மரபுநடை குழுவினர், தென்னக தொல்லியல் ஆய்வுக்கழகம், நாளிதழ்கள்
-------------------------------------------------------------------------------------------

14 மார்ச் 2025இல் மேம்படுத்தப்பட்டது.




Comments

  1. பழமைகளை நாளைய சந்ததிகளுக்கு கொண்டு செல்வது நமது கடமை.
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. தங்களின் அயராஉழைப்பு போற்றுதலுக்கு உரியது ஐயா

    ReplyDelete
  3. அய்யாவின் வழிகாட்டுதலை தொடர்ந்து எதிர்நோக்குகிறோம்....தெளிவான முன்வைப்பு

    ReplyDelete
  4. தகவல்களின் பெட்டகம்...அருமையான பதிவு..

    ReplyDelete
  5. செய்தி வெளியிடுவதற்கு முன் நிருபர்கள் உஙகளைக் கேட்டிருக்கலாம்.

    ReplyDelete
  6. அருமையான பதிவு. எப்படியோ இப்போது அருங்காட்சியகத்திற்கு ஒப்படைக்கப்பட்டது மகிழ்ச்சி இல்லையா. பாதுகாக்கப்படும். தங்களின் ஆய்வுகள் பிரமிப்பு!! உங்களது அயரா உழைப்பு அடுத்த தலைமுறைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு மட்டுமின்றி நல்ல வழிகாட்டலும் ஆகும் ஐயா.

    ReplyDelete
  7. தகவலுக்கு நன்றி!பணி சிறக்க வாழ்த்துகள்!

    ReplyDelete
  8. தங்களின் பணி போற்றுதலுக்கு உரியது ஐயா..
    தொடரட்டும் ஆய்வுகள்.

    ReplyDelete
  9. தகவலுக்கு நன்றி Discover Tamil News

    ReplyDelete

Post a Comment