பௌத்த சுவட்டைத் தேடி : ராசேந்திரப்பட்டினம்
13 மே 2018
சோழ
நாட்டில் பௌத்தம் வலைப்பூ வாசகரான சீர்காழியைச் சேர்ந்த திரு செல்வகுமார் ராசேந்திரப்பட்டின
புத்தர் சிற்பம் காணாமல் போய்விட்டதாகக் கேள்விப்பட்டதாகவும், அதன் புகைப்படம் இருப்பின்
அனுப்பிவைக்கும்படியும் கூறினார். 2007இல் திரு அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி அவர்களுடன்
மேற்கொள்ளப்பட்ட களப்பணியின்போது காணப்பட்ட இந்த சிற்பத்தைப் பற்றி நாளிதழில் வந்த
செய்தியை அனுப்பிவைப்பதாகக் கூறினேன்.
14 மே 2018
14 மே 2018
மறுநாள், வலைப்பூ வாசகரான திரு அருள்முத்துக்குமரன் முகநூலில் தன் பக்கத்தில் அந்த புத்தர் சிற்பத்தைப் பார்க்கச்
சென்றதையும், அது இரண்டு ஆண்டுக்கு முன்பாக திருடப்பட்டுவிட்டதாக அறிந்ததையும் குறிப்பிட்டு,
திரு திருவள்ளுவன் அவர்களைச் சந்தித்த அனுபவத்தையும் பகிர்ந்திருந்தார்.
ஆய்வில் சேர்ந்த காலம் முதல் மேற்கொள்ளப்பட்டு வந்த களப்பணியின்போது சோழ நாட்டில்
பல புதிய புத்தர் மற்றும் சமண தீர்த்தங்கரர் சிற்பங்களைக் காணமுடிந்தது. தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்ற களப்பணி, நண்பர்கள் மற்றும் அறிஞர்களின் ஆர்வம் காரணமாக அவர்களுடைய உதவியுடன் ஆய்வு எல்லைக்கு அப்பாலும் சில சிற்பங்களைக் காணமுடிந்தது. அவற்றுள் சுந்தரபாண்டியன்பட்டினம், இராமநாதபுரம் மாவட்டம்
(2002), ராசேந்திரப்பட்டினம், கடலூர் மாவட்டம் (2007) ஆகிய இடங்களைச் சேர்ந்த புத்தர் சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவையாகும். அந்த சிற்பத்தை 2007இல் முதல் முதலாகக் கண்டோம்.
ஏப்ரல் 2007
சில ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் செல்வோம். ஏப்ரல் 2007இல் வரலாற்றறிஞர் திரு அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி
அவர்களுடன் மேற்கொண்ட களப்பணியின்போது கடலூர் மாவட்டத்தில் விருத்தாச்சலம் வட்டத்தில் உள்ள ராஜேந்திரப்பட்டினம் என்னுமிடத்தில் இந்த சிற்பத்தைக் காணும் வாய்ப்பு கிடைத்தது.
98 செமீ உயரமும், 56 செமீ அலகமும் கொண்ட அமர்ந்த நிலையிலான இந்த புத்தர் சிற்பம் சோழ
நாட்டிலுள்ள புத்தர் சிற்பங்களைப் போலவே அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் இருந்தது.
தலையில் சுருள்முடி, அதற்கு மேல் தீச்சுடர்,
ஆழ்ந்த தியானத்தில் கண்கள், நீண்ட காதுகள், திரண்ட தோள்கள், பரந்த மார்பு, இடது பக்கம்
தோள் பட்டையிலிருந்து தொங்கிய ஆடை ஆகியவற்றைக் கொண்டிருந்தது. இந்த புத்தரை மஞ்சள்
விற்கும் செட்டியார் என்று கூறினர். கூடுதல் செய்திகளுடன் இச்சிற்பம் தொடர்பான செய்திகள்
நாளிதழ்களில் வெளியாயின.
2007இல் காணப்பட்ட சிற்பம் தற்போது காணப்படவில்லையே என்பதை அறியும்போது
வேதனையாக இருந்தது. சமயக்காழ்ப்புணர்வும், பண்பாட்டைப் பாதுகாக்கத் தவறும் நிலையுமே
இதுபோன்ற நிகழ்வுகளுக்குக் காரணமாகின்றன. இவற்றைப் பாதுகாக்கவேண்டும் என்ற உணர்வு நம்மிடையே
எழ வேண்டும். கலையையும், பண்பாட்டையும், சமயப் பெருமையினையும் வெளிப்படுத்துகின்ற
இது போன்ற சான்றுகளே நம் வரலாற்றுக்குத் துணை புரிவன என்பதை மறந்துவிடலாகாது.
-------------------------------------------------------------------------------------------
நன்றி: திரு செல்வகுமார், திரு அருள்முத்துக்குமரன்,
திரு அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி, நாளிதழ்கள்
-------------------------------------------------------------------------------------------
14 மார்ச்2025இல் மேம்படுத்தப்பட்டது.
வாழ்த்துகள் ஐயா
ReplyDeleteதங்களது மகத்தான பணி இன்னும் மேம்பட்டு வளரட்டும். வாழ்க வையகம்.
ReplyDeleteநாம் நமது பண்பாட்டையும், பழமையையும் காப்பதில் சுணக்கம் காட்டுகிறோம். உங்கள் மகத்தான பணி தொடரட்டும்.
ReplyDeleteபாதுக்காக்க வேண்டியதை விட்டு அற்பமான பொருட்களை பாதுகாத்துக்கிட்டிருக்கோம்ன்னு நினைக்கும்போது மனசு வலிக்குதுப்பா.
ReplyDeleteவாழ்த்துகள் ஐயா...
ReplyDeleteதங்க்ளது மகத்தான பணி தொடர்ந்து நமது பண்பாட்டு நாகரீக அடையாளங்களைக் காத்து பெருமை சேர்க்கட்டும் ஐயா.
ReplyDeleteஎங்களின் வாழ்த்துகள்
காணாமல் போன சிலைஎப்படிப் போயிருக்கும் திருட்டா உங்களுக்கு மேலும் களப்பணிக்கான வாய்ப்பு
ReplyDeleteதங்களின் இடையறாத சீரிய பணி சிறந்திட மனப்பூர்வ வாழ்த்துகள்.
ReplyDeleteMr Saju (thro email: saju.madhavankutty@gmail.com)
ReplyDeleteSir, it's shocking, Pls get back...
very sad...
ReplyDelete