பௌத்த சுவட்டைத் தேடி : வயலக்காவூர், காஞ்சீபுரம் மாவட்டம்

இளம்போதி என்னும் வலைப்பூவில் எழுதி வரும் திரு ஏழு. கலைக்கோவன், ஒரு புகைப்படத்தை அனுப்பி அது புத்தரா, சமண தீர்த்தங்கரரா என்று கேட்டுள்ளார். புத்தர் சிலைகளின் அமைப்பைப் பற்றியும், காஞ்சீபுரம் பகுதியில் காணப்படும் புத்தர் சிலைகளைப் பற்றியும் அவர் எழுதி வருகிறார். அச்சிலையைப் பார்க்க சோழ நாட்டிலிருந்து காஞ்சீபுரம் மாவட்டத்திற்குப் போவோம் வாருங்கள். 

காஞ்சீபுரம் வட்டம் வாலாஜாபாத் வட்டம், நெய்க்காடுபாக்கம் வயலக்காவூர் என்னுமிடத்தில் உள்ள அச்சிலை புத்தரா தீர்த்தங்கரரா என்ற ஐயத்தை பின்வரும் அடையாளங்கள் உண்டாக்குகின்றன என்று அவர் கூறியுள்ளார்.

1) தோள் பட்டைக்கு மேல் உள்ள உருவம்
2) சீவர ஆடை
3) கையில் பூ போன்று உள்ளது. ஆனால் தாமரையா என்று சொல்ல முடியவில்லை. தெளிவாக இல்லை.

தமிழகத்தில் சோழ நாட்டை (ஒருங்கிணைந்த தஞ்சாவூர், ஒருங்கிணைந்த திருச்சி, புதுக்கோட்டை) எனது களமாகக் கொண்டு புத்தர் சிலைகளையும், சமண தீர்த்தங்கரர் சிலைகளையும் பார்த்த நிலையில் ஓரிரு சிலைகளை மட்டுமே பிற பகுதிகளில் பார்த்துள்ளேன். பல இடங்களில் இருந்தும் இதுபோன்ற கடிதங்கள் வரும் நிலையில் அதிகமான பணியின் காரணமாக அவற்றை ஆழ்ந்து பார்த்து மறுமொழி கூறுவது என்பது சற்றே சிரமமாக இருக்கின்றது. பொதுவாக சோழ நாட்டில் இவ்வாறாக சிலைகளைப் பற்றிய விவரம் தெரியவரும்போதோ, புகைப்படம் கிடைக்கும்போதோ நேரில் சென்று பார்த்துவிட்டு எழுதுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளேன். இருந்தாலும் திரு கலைக்கோவனின் ஆர்வம் காரணமாக இச்சிலையைப் பற்றிய எனது புரிதலை அவர் அனுப்பியுள்ள புகைப்படங்களின் அடிப்படையில் பகிர விரும்புகிறேன்.


அதிகமான பணியின் காரணமாக அவற்றை ஆழ்ந்து பார்த்து மறுமொழி கூறுவது என்பது சற்றே சிரமமாக இருக்கின்றது. பொதுவாக சோழ நாட்டில் இவ்வாறாக சிலைகளைப் பற்றிய விவரம் தெரியவரும்போதோ, புகைப்படம் கிடைக்கும்போதோ நேரில் சென்று பார்த்துவிட்டு எழுதுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளேன். இருந்தாலும் திரு கலைக்கோவனின் ஆர்வம் காரணமாக இச்சிலையைப் பற்றிய எனது புரிதலை அவர் அனுப்பியுள்ள புகைப்படங்களின் அடிப்படையில் பகிர விரும்புகிறேன்.

இச்சிலை புத்தர் சிலை இல்லை
1) இச்சிலையின் தலையில் தீச்சுடர் காணப்படவில்லை.
2) இடுப்பில் மேலாடை இல்லை.
3) மார்பின் குறுக்கே மேலாடை இல்லை.
4) உதட்டில் புன்னகை காணப்படவில்லை.
5) மேலே வலது புறத்தில் காணப்படும் உருவம் சாமரம் வீசுபவராக இருக்கலாம். இது பெரும்பாலும் சமண தீர்த்தங்கரர் சிலைகளில் உள்ளது. பொதுவாக இரு புறமும் இவ்வாறான உருவம் காணப்படும். (ஓரிரு புத்தர் சிலைகளில் மட்டும் இதுபோன்ற சாமரம் வீசுபவர் உருவத்தைப் பார்த்துள்ளேன்)
6) கையில் உள்ளது தெளிவாகத் தெரியவில்லை. இருந்தாலும் புத்தர் சிலையில் இதுபோன்ற அமைப்பில் கையில் எதுவும் வைத்திருக்க வாய்ப்பில்லை. 

சமண தீர்த்தங்கரர் சிலையின் சில கூறுகள்
சோழ நாட்டில் களப்பகுதியில் காணப்படும் சமண தீர்த்தங்கரர் சிலைகளைப் போல இது காணப்படவில்லை. அச்சிலைகளில் காணப்படும் சில கூறுகளை மட்டுமே காணமுடிகிறது. மேலும் கழுத்திலும், கைகளிலும், இடுப்பிலும் போடப்பட்ட கோடு, மார்பில் கூர்மையாக செதுக்கப்பட்ட கோடுகளை வைத்துக்கொண்டு முடிவு செய்வது என்பது சற்றே சிரமமாக உள்ளது. இச்சிலை அண்மைக்காலத்தில் செதுக்கப்பட்டிருக்க இருக்க வாய்ப்புண்டு. 

நேரடியாக களப்பணி செல்லாமல் புகைப்படத்தை வைத்து நோக்கும்போது இச்சிலை புத்தர் சிலை இல்லை என்று உறுதியாகக் கூறலாம். 

Comments

  1. புத்தர், சமண தீர்த்தங்கர் குறித்து தங்கள் விளக்கம் எங்களுக்கு வேறு பாட்டை உணர்த்துகிறது.

    ஒரே மாதிரித் தான் எங்களுக்கு தெரிகிறது. இவ்வளவு இருக்கிறது என்பது இப்போது புரிகிறது. நன்றி ஐயா
    தம 1

    ReplyDelete
  2. முனவைருக்கு வணக்கம் தங்களது பணி மென்மேலும் சிறக்க எமது வாழ்த்துகள் அரிய விடயம் அறிந்தேன் இளம்போதி தளம் சென்று வந்தேன் பகிர்வுக்கு நன்றி
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  3. பெருமகிழ்ச்சி ஐயா,

    புத்தரா அல்லது தீர்த்தங்கரா என்ற மயக்கம் இன்றும் உள்ளது. இது பல அறிஞர்களிடமும் காணப்படுகிறது.

    ஆராய்சி பேரறிஞர் திரு மயிலை சினி வேங்கடசாமி அவர்களிடமும் நிகழ்ந்துள்ளது, தொல்லியல் துறை அறிஞர் திரு. இராஜகோபால் அவர்களும் நிகழ்ந்துள்ளது, Dr.K.சிவராமலிங்கம்:Archaeological atlas of the antique remains of Buddhism in Tamil Nadu (முக்குடை உள்ள சிலை) என்ற நூலிலும் காணப்படுகிறது.

    தொல்லியல் துறை அறிஞர் திரு Dr D தயாளன் அவர்கள், 1990-91 ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் உள்ள குன்றில் அகழாய்வு மேற்கொண்ட பொழுது ஒரு சிலை கண்டெடுக்கப்பட்ட (Draupathi Bath) 3 அடி. உயரமுள்ள சிலையை புத்தர் அல்லது தீர்தங்கர் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் திரு Dr.K.சிவராமலிங்கம் அவர்கள் புத்தர் சிலை என்று குறிப்பிடுகிறார். எனவே மகாபலிபுரம் தொல்லியல் துறைக்கு சென்று, அந்த சிலையை பார்த்தேன். திரு Dr D தயாளன் அவர்கள் குறிப்பிட்டதை போன்று மயக்கம் ஏற்பட காரணம், சிலை உடல் பகுதி அதிகமாக சிதைவுற்று இருந்தது. சிலையின் தலைபகுதி இல்லை. கழுத்தில் இருந்து சிந்தனை கை வரை ஒரு பகுதியும், செம்பாதி தாமரை அமர்வில் இருந்து பீடம் வரை ஒரு பகுதியும் இருந்தது. சீவர ஆடையை கண்டறிய முடியவில்லை, சுருக்கமாக இச்சிலை புதுக்கோட்டை குடுமியான்மலை சாலையில் கட்டியாவயல் அருகே உள்ள கவிநாடு கண்மாயில் 3.5 அடி உயரமும் உள்ள சிலையை போன்று இருந்தது (ஆனால் தலைபகுதி இன்றி). தொல்லியல் துறை அந்த சிலையை படம் எடுக்க அனுமதிக்கவில்லை
    உங்களின் இந்த வலைப்பதிவை வயலாக்கவூர் திரு வேங்கடசாமி செட்டியார் பேரன் திரு இலட்சுமிபதி அவர்களுக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கிறேன். அவ்வூரில் உள்ளவர்கள் தெளிவு பெறட்டும்.

    வணிகவியல் முதுநிலை பட்டம் பெரும் வரை நான் ரஜினி ரசிகன். அவரை அவரின் வீட்டுக்கு சென்று பார்த்தேன். அப்பொழுது அவர் என் தொல் மீது கை போட்ட பொழுது பெற்ற மகிழ்ச்சியை நேற்று ஐயா அவர்கள் கை பேசியில் இரவு பேசியபொழுது நினைவு கூர்ந்தேன். பெருமகிழ்ச்சி - நன்றி

    ReplyDelete
  4. புத்தர் பற்றி விரிவாக பகிர்ந்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. புத்தர் பற்றி விரிவாக பகிர்ந்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. எனக்கு நான் எழுதி இருந்த அடையாளங்கள் என்னும் பதிவு நினைவுக்கு வந்தது உங்கள் ஆர்வத்துக்குப் பாராட்டுக்கள்

    ReplyDelete
  7. தங்கள் ஆய்வு குறிப்பிடத் தக்கது.சில தகவல்களை புரிந்து கொண்டோம். தொடரட்டும் உங்கள் மகத்தான பணி வாழ்த்துகள் ஐயா!

    ReplyDelete
  8. உங்கள் ஆராய்ச்சிக்கும் ஒரு ஜூனியர் கிடைத்து விட்டார் போலிருக்கே :)

    ReplyDelete
  9. அரிய தகவல்களைக் கொண்ட பதிவு.

    ReplyDelete
  10. Mr Krishnan odathurai (thro' email: onkrishnan@yahoo.com)
    Dear Sir,That is the Buddha figure. Hair style clearly shows..
    -Thanks and regards,O.N.Krishnan

    ReplyDelete

Post a Comment