உலக மரபு வாரம் 2023 : தமிழக நடுகல் மரபு
தஞ்சாவூர், சங்கீத மகாலில் உலக மரபு வாரத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், யாக்கை மரபு அறக்கட்டளை, சோழர் வரலாற்று ஆய்வு சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தியநடுகல் மரபு தொடர்பான வரலாற்றுக் கண்காட்சி 19.11.2023 முதல் 24.11.2023 வரை நடைபெற்றது.
நடுகல் மரபினை ஒரு பறவைப்பார்வையில் நம் முன் கொண்டுவந்து நிறுத்திய அமைப்பாளர்களின் முயற்சி போற்றத்தக்கதாகும். இக்கண்காட்சிக்குச் சென்றது ஒரு நினைவில் நிற்கும் அனுபவம். நடுகற்களைப் பற்றி உரிய குறிப்புகளுடன் காட்சிப்படுத்திப்பட்டிருந்த விதமும், பார்வையாளர்களுக்கு யாக்கை குழுவினர் விளக்கிய விதமும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் அமைந்திருந்தது.
அப்போது ஆய்வின்போது நான் கண்ட புத்தர் சிலைகளைப் பற்றியும் என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் (புது எழுத்து, காவேரிப்பட்டினம், 2022) நூலைப் பற்றியும் உரையாடினேன். பல இடங்களில் சிலைகள் நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன. சில இடங்களில் வழிபாட்டில் உள்ளன. களப்பணியில் நான் கண்ட சில புத்தர் சிலைகள் அருங்காட்சியகத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டன. பல இடங்களில் அவை பாதுகாப்பின்றி இருப்பதைப் பற்றியும், அவற்றைப் பாதுகாப்பதற்கான முக்கியத்துவத்தையும் தெரிவித்தேன். நல்வாய்ப்பினைத் தந்த நிகழ்ச்சிப் பொறுப்பாளர்களுக்கு நன்றி கூறினேன்.
![]() |
முனைவர் டி.தயாளன் உடன் |
Super pa.congratulations ...💐💐💐
ReplyDeleteஓயா உழைப்பு
ReplyDeleteபௌத்தம் தழைக்கிறது
மகிழ்ச்சி பரவுகிறது
கலியுகன்கோபி சென்னை
தங்களின் அயரா உழைப்பு
ReplyDeleteபோற்றுதலுக்கு உரியது ஐயா
மிகச் சிறப்பு ஜம்புலிங்கம்... பௌத்தம் தொடர்பான கலந்துரையாடல், ஆய்வு மற்றும் கருத்தரங்கு எதுவானாலும் உங்கள் பங்களிப்பு மிகவும் பயனுள்ளதாகவும் சிறப்பானதாகவும் அமைகிறது... நன்றி நண்பரே....
ReplyDeleteSuperb sir
ReplyDelete