சோழ நாட்டில் பௌத்தம் : திரிபீடக தமிழ் நிறுவனம்

27 ஜுன் 2020ஆம் நாளன்று, சென்னை திரிபீடகத் தமிழ் நிறுவனம் சார்பாக நடைபெற்ற தம்ம உரை-1 பகுதியில், சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பில் என்னுடைய ஆய்வு மற்றும் களப்பணி தொடர்பாக உரையாற்றும் வாய்ப்பினைப் பெற்றேன்.




ஆய்வினைத் தெரிவு செய்த சூழல், தலைப்பினைத் தேர்ந்தெடுத்த முறை, முதலில் ஆய்வியல் நிறைஞர் ஆய்வு மேற்கொண்ட பின்னர் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டதற்கான காரணம், களப்பணியின்போது 17 புத்தர் சிலைகளையும், 13 சமண தீர்த்தங்கரர் சிலைகளையும் நண்பர்கள் மற்றும் அறிஞர்கள் துணையோடு கண்டெடுத்தது உள்ளிட்டவை பற்றிய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டேன். இணைய வழியாக நேரடியாக முதன்முதலாக இவ்வாறாக உரையாற்றியது சற்றே வித்தியாசமாக இருந்தது. தொல்லியல் அறிஞர் திரு ஸ்ரீதரன், மதுரை அருங்காட்சியகக் காப்பாட்சியர் திரு மருதுபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  

வாய்ப்பினைத் தந்த திரிபீடக தமிழ் நிறுவனத்திற்கும் திரு ஈ.அன்பன், திரு ஜெயபாலன் உள்ளிட்ட பொறுப்பாளர்களுக்கும், உரையினைக் கேட்ட நண்பர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்கள், ஆர்வலர்கள் ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இவ்வுரையை யுட்யூபில் கீழ்க்கண்ட இணைப்பில் கேட்கலாம்.


பிற யுட்யூப் பதிவுகள்

1.வேர்கள் மாதாந்திரச் சொற்பொழிவு/பொன்னி நாட்டில் பௌத்தம் - ஜம்புலிங்கம் சிறப்புரை | வேர்கள் | B Jambulingam speech/30.11.2018 


2.அகிம்சை நடையின் இணைவோம் இணைய வழியால் 4/முனைவர் ஜம்புலிங்கம் களப்பணியில் சமணம்/9.8.2020


3.விக்கிப்பீடியாவில்தமிழகக் கோவில்கள் - அனுபவக் கட்டுரைகள்| GCHRG WEBINARS 2020| PART-3 | Webinar 8/6.9.2020


4.புதுவைத் தமிழாசிரியர்கள்-மின்முற்றம்-122 “பொன்னி நாட்டில் பௌத்தம்” முனைவர் ஜம்புலிங்கம்/16.11.2020 


1 டிசம்பர் 2020இல் மேம்படுத்தப்பட்டது.

Comments


  1. தங்களது பணி மென்மேலும் சிறக்கட்டும். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    தளம் புதிய அமைப்பாக இருக்கிறதே... பிறகு கணினியில் பார்க்கிறேன்.

    ReplyDelete
  2. வாழ்த்துகள் ஐயா...

    இங்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்...

    ReplyDelete
  3. உண்மையிலேயே வியப்புக்குரிய ஆய்வுப் பணிகள் நீங்கள் ஆற்றி இருப்பவை...கூடுதலான அங்கீகாரம் இந்த வாய்ப்பு. இனிய வாழ்த்துகள்.

    எஸ் வி வேணுகோபாலன் 
    94452 59691 

    ReplyDelete
  4. மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
  5. அருமை அய்யா மகிழ்ச்சி உங்கள் பணி தொடரட்டும்

    ReplyDelete

Post a Comment