தமிழர் வழிபாடு : முனீஸ்வர புத்தர்



-------------------------------------------------------------------------------------------
இவ்வார ராணி (3.5.2015 நாளிட்ட) இதழில் வெளியான எனது இருபதாண்டு கால ஆய்வு தொடர்பான பதிவைப் புத்த பூர்ணிமாவையொட்டி பகிர்வதில் மகிழ்கின்றேன். இதனை வெளியிட்ட அவ்விதழுக்கு நன்றி. 



என் ஆய்வுக்குத் தடம் அமைத்துத் தந்த தமிழ்ப்பல்கலைக்கழகத்தை நன்றியோடு நினைவுகூர்கிறேன்.
-------------------------------------------------------------------------------------------
அரண்மனையைத் துறந்தவர்...துறவறம் பூண்டவர இளவரசர் கௌதம புத்தர். அவரது பௌத்த மதம் ஒரு காலத்தில் தமிழகத்தில் பரவலாக பின்பற்றப்பட்டது. அவருடைய சிலைகளை தேடுவதை 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு வேள்வியாக செய்து வருகிறார், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் முனைவர் ஜம்புலிங்கம்.

அவரது அனுபவங்கள்:
"நான் 'எம்ஃபில்' பட்டத்துக்காக கல்கியின் 'பொன்னியின் செல்வன்'  நாவல் தொடர்பாக ஆய்வு செய்ய விரும்பினேன். ஆனால், ஆங்கிலத்தில் ஆய்வு மேற்கொள்ள வேண்டி இருந்தது. தமிழில் படித்து, ஆங்கிலத்தில் புரிந்துகொண்டு, எழுதுவது சிரமம் என்பதால் 'தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தம்' என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்தேன்.

முதலில், தஞ்சாவூர் கலைக்கூடத்தில் உள்ள புத்தர் சிலைகளைப் போய்ப் பார்த்தேன். அவை தொடர்பான விவரங்களையும் நூல்களையும் படித்து....சிலைகள் காணப்பட்ட இடங்களைப் பற்றிய முழுமையான குறிப்புகளை சேகரித்தேன். பின்னர், நேரம் கிடைத்தபோது அந்தந்த இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தேன்.

இந்த மாவட்டத்தில் பெரும்பாலான புத்தர் சிலைகள்...அமர்ந்த நிலையில் அல்லது தியான கோலத்தில் உள்ளன. நின்றபடி  உள்ளவை மிகவும் குறைவு. அமர்ந்த நிலையில் சிலையில் உஷ்னிஷா எனப்படும் தீச்சுடருடன் கூடிய முடி அமைப்பு, சற்றே மூடிய கண்கள், அமைதி தவழும் முகம், நீண்ட காதுகள், மேலாடை, கையில் தர்ம சக்கரக்குறி, நெற்றியில் திலகக்குறியீடு போன்றவை காணப்படுகின்றன.

பல இடங்களில் புத்தரை வழிபடுகிறார்கள். அய்யம்பேட்டையில் 'முனீஸ்வரன்' என்றும், பெருஞ்சேரியில் 'ரிஷி' எனவும் மக்கள் வணங்குகிறார்கள். 

கும்பகோணம் பகவ விநாயகர் கோவிலில் இருக்கிற பகவர், புத்தர் அல்ல என்று கண்டுபிடித்தது..
பல இடங்களில் புத்தரைத் தேடிப் போய் சமணரைப் பார்த்தது...
கும்பகோணம் கும்பேஸ்வரர் தலத்தில் பௌத்தம் தொடர்பான கல்வெட்டைக் கண்டறிந்தது...
தஞ்சை மண்ணில் புதூர் புத்தரைக் கண்டுபிடிக்க ஒரே நாளில் 25 கிமீ தூரம் சைக்கிளில் பயணம் சென்றது...
என்ற மறக்க முடியாத அனுவங்கள். மங்கலத்தில் மீசையுடன் கூடிய புத்தர் சிலை காணப்படுகிறது.

1993இல் இருந்து தனியாகவும், நண்பர்களின் துணையோடும் 29 புத்தர் மற்றும் சமணர் சிலைகளைக் கண்டுபிடித்திருக்கிறேன். களப்பணிகளின் போது பல இடங்களில் புத்தர் சிலைகள் கேட்பாரின்றி கிடந்ததைக் கண்டேன். இப்போது அவை பாதுகாக்கப்பட்டு வருவதையும், வழிபாடு நடத்தப்படுவதையும் காணமுடிகிறது.

பல இடங்களில் சிதிலம் அடைந்த சிலைகளையும் பார்த்திருக்கிறேன். இருக்கும் சிலைகளை முடிந்தவரை நன்கு பராமரிக்கவும் பாதுகாக்கவும் முயற்சி மேற்கொண்டால் அதுவே வரலாற்றுக்கு செய்யும் சிறப்பாகும்!" என்கிறார்.

மனிதப்புனிதரின் தடயங்களைத் தேடும் மகத்தான பயணம் இது.  
-------------------------------------------------------------------------------------------
சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பிலான  ஆய்வு தொடர்பாக 2008 தொடங்கி வெளியான பிற பேட்டிகளை கீழ்க்கண்ட இணைப்பில் காணலாம். வெளியிட்ட இவ்விதழ்களுக்கு நன்றி.

1)தினமணி 6.1.2008 :
புத்தரைத்தேடி
2)டைம்ஸ் ஆப் இந்தியா, 29.10.2012 : 
Buddha spotting in Chola country fills his weekends 
3)தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்,15.5.2015 :
Tracing footprints of Buddhism in Chola Country

-------------------------------------------------------------------------------------------
1.11.2015 அன்று மேம்படுத்தப்பட்டது.

Comments

  1. வாழ்த்துக்கள் தொடருங்கள் ஐயா.

    தம +1

    ReplyDelete
  2. அருமையான பதிவுங்க அய்யா

    ReplyDelete
  3. சோழவள நாடு சோறுடைத்து என்பார்கள் ,புத்தரும் உடைய பெருமை படைத்து என்பதை ஆய்வின் மூலம் நிரூபித்த உங்கள் பணி போற்றத் தகுந்தது !

    ReplyDelete
  4. மிகவும் மகிழ்ச்சி ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. படித்து மகிழ்ந்தேன் முனைவரே மென்மேலும் பல தொடர எமது வாழ்த்துகள்
    தமிழ் மணம் 5

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் ஐயா
    நன்றி
    தம +1

    ReplyDelete
  7. வணக்கம்
    ஐயா
    மகிழ்ச்சியான தகவல்.. பகிர்வுக்கு நன்றி த.ம 7
    நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. சோழநாட்டில் பௌத்தம் – என்ற தங்களது ஆராய்ச்சிக்கான ஊற்றுக்கண் எங்கிருந்து தொடங்கியது என்பதனை அறிந்து கொண்டபோது, எல்லாம் நன்மைக்கே என்ற சித்தாந்தம்தான் நினைவில் வந்தது. காரணம் பொன்னியின் செல்வன் என்ற ஒரு நாவலோடு உங்கள் ஆராய்ச்சி முடிந்து போகாமல், பௌத்தம் என்ற மாபெரும் தத்துவத்திற்கான உங்கள் ஆராய்ச்சி இன்றுவரை தொடர்வதுதான்.

    ராணியில் வந்த ஆய்வுப் பணி குறித்த, தங்களைப் பற்றிய கட்டுரையின் பகிர்வினுக்கு நன்றி.

    த.ம.8

    ReplyDelete
  9. அன்பையும்,இரக்கத்தையும் இறையருளாகவே இயம்பியவரை பற்றிய மகத்தான ஆய்வினை மேற்க்கொண்டு அதனை பற்றிய செய்திகளை தேடிக் கண்டுபிடித்து தரும்
    தென்னாட்டுத் தேனீ எங்களது பதிவுலக முனைவர் என்று எண்ணும்போது எங்களது
    மகிழ்வின் மகுடத்தை தங்களுக்கு தமிழின் பரிசாக தருகிறோம் அய்யா அவர்களே!
    தமிழர் வழிபாடு : முனீஸ்வர புத்தர் வெகு சிறப்பு! நன்றி அய்யா!
    த ம நவரத்தினம் 9
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  10. பயணம் தொடரட்டும்.

    ReplyDelete
  11. தங்களது களப்பணியின் பெருமை - ராணி வார இதழில் வெளியானது குறித்து மகிழ்ச்சி.. நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் ! அய்யா..“மனிதப்புனிதரின் தடயங்களைத் தேடும் மகத்தான பயணம் தொடரட்டும் ” அய்யா.

    ReplyDelete
  13. தங்கள் பணி சிறப்பானது தொடருங்கள்! தொடர்வேன்!

    ReplyDelete
  14. உங்கள் களப் பணிக்குத் தலைவணங்குகிறேன்.

    தொடருங்கள் ஐயா!

    த ம கூடுதல் 1

    நன்றி

    ReplyDelete
  15. நான் தமிழ்ப்படுத்திய அசோகர் நூலில் வரும் பலரின் தொடர்ந்த தேடலும், உங்கள் தொடர்ந்த தேடலும் பெரும் ஒற்றுமைகளோடு உள்ளன. மேலும் முயற்சிகள் தொடர வாழ்த்துகள்

    ReplyDelete
  16. எந்த செய்கையின் பலனும் பல சோதனைகளுக்குப் பிறகு அங்கீகைக்கப் படும் போது மகிச்சி எல்லை இல்லாதது. வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
  17. சோழநாட்டில் பெளத்தம் என்ற தலைப்பில் தங்கள் ஆராய்ச்சி மற்றும் களப்பணி பற்றி அறிந்து வியந்தேன். ராணியில் இது குறித்த கட்டுரை வெளியாகியிருப்பதற்குப் பாராட்டுக்கள் ஐயா! உங்கள் ஆராய்ச்சியும் தேடலும் தொடரட்டும்!

    ReplyDelete
  18. Anonymous04 May, 2015

    மிகவும் சீரிய பணியை தாங்கள் மேற்கொண்டு வருகின்றீர்கள் ஐயா. ஒருமுறை புதுக்கோட்டை கீரனூர் பக்கத்தில் இருக்கும் எதோ ஒரு மலைமாதா என்ற தேவாலயத்தின் பின்புறம் இருக்கும் கல்குவாரிக்கு அருகே இருக்கும் மலைப்பகுதியில் புத்தர் சிலை ஒன்றை நான் கண்டிருக்கின்றேன். கவனிப்பாரற்று அது கிடந்தது. இதுவே வெளிநாடாக இருந்தால் அது உடனடியாக அருங்காட்சியகத்தில் பத்திரப்படுத்தப்பட்டு இருக்கும். நம் தமிழகத்தில் எத்தனையோ அரிய வரலாற்று பொக்கிசங்களை தவறவிட்டு வருகின்றோம். குறிப்பாக ஆயிரத்து 1500 ஆண்டுகள் தமிழகத்தில் பௌத்தம், சமணம் ஆகிய மதங்கள் பின்பற்றப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால் இவை குறித்த வரலாற்று ஆய்வுகள் மிக குறைவாக உள்ளன. சோழ நாட்டில் பௌத்தமும், பாண்டிய நாட்டில் சமணமும் பல வரலாற்று ஆவணங்களை விட்டுச் சென்றுள்ளன. விரைவில் இவை அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் அதற்கு தங்களைப் போன்றோரது அயராத உழைப்பும் ஆர்வமும் உந்துகோலாக இருக்கின்றது என்பது நிச்சயம். நன்றிகள் !

    ReplyDelete
  19. அன்பின் ஜம்புலிங்கம்

    தங்களீன் முயற்சிக்குப் பாராட்டுகள்

    மனிதப்புனிதரின் தடயங்களைத் தேடும் மகத்தான பயணம் சிறப்புடன் வெற்றி பெற நல்வாழ்த்துகள்

    நட்புடன் சீனா

    ReplyDelete
  20. ராணி வார இதழில் வெளியானதற்கு வாழ்த்துகள்.புத்தர் ஞானத்தை தேடி அறிந்தார். நீங்கள் புத்தரை தேடி வெளிபடுத்துகிறீர்கள்.போற்றுதற்குரிய சேவை. வரலாறு உங்களை வாழ்த்தும்

    ReplyDelete
  21. அன்பின் ஜம்புலிங்கம் அய்யா அவர்களுக்கு

    ராணி வார இதழில் இத்தகு ஆய்வு குறித்த செய்திகளும், ஆய்வாளர் குறித்த மதிப்பு மிக்க அறிமுகமும் வெளிவந்திருப்பது மிக எளிய வாசக பரப்புக்கு உங்களது செய்திகளைக் கொண்டு சேர்த்ததாகிறது. அருமை...அருமை...

    புத்தர், வழிபாடுகளைக் கண்டித்தவர். புனித நதி, சிலை வழிபாடு உள்பட அவர் புறக்கணிக்கச் சொன்ன வடிவங்களின் ஊடாகவே அவர் நினைவு கூரப்படுவது ஒரு சுவாரசியமான முரண். தத்துவங்களின் ஆட்சி நூற்றாண்டுகளைக் கடந்தும் மக்களது இரத்த ஓட்டத்தில் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படுகிறது. அது நொறுக்கப்படாமல் மாற்றங்கள் சாத்தியமில்லை...

    பொதுவுடைமை இயக்க அறிஞர் ஒருவர் ஒருமுறை சொன்னார்: "தில்லி பயணத்தின்போது மிக தற்செயலாக சக பயணிகளோடு அன்போடு தொடங்கிய விவாதம் இரண்டரை மணி நேரம் தொடர்ந்தது. கடவுள் என்று ஒருவர் எப்படி இருக்க சாத்தியமில்லை என்பதை நிறுவிய என் வாதங்களைப் போற்றிய ஒரு பெரியவர், இப்படி வாழ்த்தினார் என்னை: அய்யா சரசுவதி உங்கள் நாக்கில் என்னமா தாண்டவமாடுறா...நான் சிரித்துக் கொண்டே அதை எதிர்கொண்டேன்...மக்களது உணர்வுகளில் மாற்றம் வந்தாலும், அறிவில் தெறிப்பு ஏற்பட்டாலும்கூட ஆண்டாண்டுக் காலம் நிலவிய சொல்லாடல்கள் மாற காலம் எடுக்கும்"

    நாம் காந்தியைப் போற்றுவோம். உண்மையை நழுவ விடுவோம். எளிமையை பரிகசிப்போம்.
    அம்பேத்கரை வணங்கக் கூட செய்வோம். தீண்டாமையை ஒழிக்க மறுப்போம்.

    அப்துல் ரகுமான் இப்படி ஒரு முறை எழுதி இருந்தார்:

    "தினங்களைக் கொண்டாடுவதை விட்டு, குழந்தைகளை எப்போது கொண்டாடுவோம்?"

    இது எல்லாவற்றுக்கும் பொருந்தும்...

    அன்புடன்


    எஸ் வி வேணுகோபாலன்

    ReplyDelete
  22. சோழ நாட்டில் பௌத்தம் தொடரட்டும்/ சோழநாட்டுப் பகுதியில் தற்போது பௌத்தம் பின்பற்றப்படுவது/ குறிப்பு தரலாமே

    ReplyDelete
  23. அன்புள்ள முனை. ஜம்புலிங்கம், உங்களுடைய தொடர் பணிக்கு என்னுடைய வாழ்த்துகள். நீங்கள் தமிழ்ப்பல்கலைக்கழக மொழியியல்
    துறையில் இருக்கும்போது உங்கள் ஆய்வு மலர்ந்ததை நினைவு கூர்கிறேன். மேலும் மேலும் தொடர வாழ்த்துகிறேன். உங்கள் மொழிபெயர்ப்புப் பணியும் சிறக்கட்டும். (பேராசிரியர் முனைவர் கி.அரங்கன் Rangan Krishnasamy <rangan.lingprof@gmail.com மின்னஞ்சல் வழியாக)

    ReplyDelete
  24. அய்யா வணக்கம்.
    தங்கள் தளத்திலேயே இந்தப் படங்களைப் பார்த்து, செய்திகளைப் படித்திருந்தாலும், பலரையும் சென்றடையும் ராணி இதழில் வந்தது குறித்துப் பெருமகிழ்வு கொண்டேன். இது வரவேற்கத் தக்கது.
    அவ்வளவு பேரறிஞர் உ.வே.சா.அவர்கள் தமது வரலாற்றை ஆனந்த விகடன் வாரஇதழில் எழுதியதும் இதனால்தானே? தொடர்க. தொடர்வேன் நன்றி

    ReplyDelete
  25. ராணி இதழில் தங்களின் கட்டுரை வெளியானதற்கு வாழ்த்துக்கள். பலரையும் சென்றடையும். தாங்கள் புத்தரைக் குறித்த ஆய்வுகள் வியக்க வைக்கின்றன. தொடரட்டும் தங்களின் சீரிய ஆய்வுப் பணி. தகவல்கள் எல்லாமே புதியவை. அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  26. வரலாற்றை மீட்டெடுக்கும் பணி மேலும் சிறக்கட்டும் அய்யா

    ReplyDelete
  27. தங்கள் பணி தொடரட்டும்...அய்யா...

    ReplyDelete
  28. தங்கள் சீரிய ஆய்வுகள் தொடரட்டும் ..
    மகிழ்வு
    தம +

    ReplyDelete
  29. அருமை.
    நன்றி.

    ReplyDelete
  30. Anonymous23 May, 2015

    Very interesting.Greetings. Valliappan

    ReplyDelete
  31. மிக்க மகிழ்ச்சி அய்யா ...

    ReplyDelete
  32. தமிழர் வழிபாடு : முனீஸ்வர புத்தர் = எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி டாக்டர் Jambulingam Balagurusamy

    ReplyDelete
  33. Dr Karthikeyan (thro' email: drkarthik53@gmail.com)
    Keep up, congratulations. A. Karthikeyan

    ReplyDelete
  34. அன்பின் ஜம்புலிங்கம் அய்யா அவர்களுக்கு
    ராணி வார இதழில் இத்தகு ஆய்வு குறித்த செய்திகளும், ஆய்வாளர் குறித்த மதிப்பு மிக்க அறிமுகமும் வெளிவந்திருப்பது மிக எளிய வாசக பரப்புக்கு உங்களது செய்திகளைக் கொண்டு சேர்த்ததாகிறது. அருமை... அருமை...புத்தர், வழிபாடுகளைக் கண்டித்தவர். புனித நதி, சிலை வழிபாடு உள்பட அவர் புறக்கணிக்கச் சொன்ன வடிவங்களின் ஊடாகவே அவர் நினைவு கூரப்படுவது ஒரு சுவாரசியமான முரண். தத்துவங்களின் ஆட்சி நூற்றாண்டுகளைக் கடந்தும் மக்களது இரத்த ஓட்டத்தில் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படுகிறது. அது நொறுக்கப்படாமல் மாற்றங்கள் சாத்தியமில்லை...
    பொதுவுடைமை இயக்க அறிஞர் ஒருவர் ஒருமுறை சொன்னார்: "தில்லி பயணத்தின்போது மிக தற்செயலாக சக பயணிகளோடு அன்போடு தொடங்கிய விவாதம் இரண்டரை மணி நேரம் தொடர்ந்தது. கடவுள் என்று ஒருவர் எப்படி இருக்க சாத்தியமில்லை என்பதை நிறுவிய என் வாதங்களைப் போற்றிய ஒரு பெரியவர், இப்படி வாழ்த்தினார் என்னை: அய்யா சரசுவதி உங்கள் நாக்கில் என்னமா தாண்டவமாடுறா...நான் சிரித்துக் கொண்டே அதை எதிர்கொண்டேன்... மக்களது உணர்வுகளில் மாற்றம் வந்தாலும், அறிவில் தெறிப்பு ஏற்பட்டாலும்கூட ஆண்டாண்டுக் காலம் நிலவிய சொல்லாடல்கள் மாற காலம் எடுக்கும்"
    நாம் காந்தியைப் போற்றுவோம். உண்மையை நழுவ விடுவோம். எளிமையை பரிகசிப்போம். அம்பேத்கரை வணங்கக் கூட செய்வோம். தீண்டாமையை ஒழிக்க மறுப்போம்.
    அப்துல் ரகுமான் இப்படி ஒரு முறை எழுதி இருந்தார்:
    "தினங்களைக் கொண்டாடுவதை விட்டு, குழந்தைகளை எப்போது கொண்டாடுவோம்?" இது எல்லாவற்றுக்கும் பொருந்தும்...
    அன்புடன், எஸ் வி வேணுகோபாலன் (மின்னஞ்சல்sv.venu@gmail.com வழியாக)

    ReplyDelete
  35. அன்புள்ள முனை. ஜம்புலிங்கம்
    உங்களுடைய தொடர் பணிக்கு என்னுடைய வாழ்த்துகள். நீங்கள் தமிழ்ப்பல்கலைக்கழக மொழியியல் துறையில் இருக்கும்போது உங்கள் ஆய்வு மலர்ந்ததை நினைவு கூர்கிறேன். மேலும் மேலும் தொடர வாழ்த்துகிறேன். உங்கள் மொழிபெயர்ப்புப் பணியும்
    சிறக்கட்டும். (முனைவர் கி.அரங்கன், மின்னஞ்சல் rangan.lingprof@gmail.com வழியாக)

    ReplyDelete

Post a Comment