பொன்னி நாட்டில் பௌத்தம் : வேர்கள் : 25 நவம்பர் 2018

சரோஜினி ராமலிங்கம் அறக்கட்டளை வழங்கிய வேர்கள் மாதாந்திர சொற்பொழிவு நிகழ்வு 25 நவம்பர் 2018 காலை மயிலாடுதுறை அருகேயுள்ள மணக்குடியில் இராமலிங்க விலாஸில் நடைபெற்றது.


சரோஜினி ராமலிங்கம் அறக்கட்டளை நிறுவனர் மருத்துவர் திருமதி சரோஜினி முன்னிலை வகித்தார்.

சிறப்புரையாக பொன்னி நாட்டில் பௌத்தம் தலைப்பில் உரையாற்றும் வாய்ப்பினைப் பெற்றேன். காவிரியால் சோழ நாடு பொன்னி என்றழைக்கப்படுகிறது என்பதில் தொடங்கி, களப்பணியின் மீதான ஆர்வம், அதன்மூலமாகவே புதிதாகச் செய்திகளை வரலாற்றுலகிற்கு அளிக்க முடியும் என்ற எண்ணம் உதித்தமை தொடங்கி பௌத்தம் தொடர்பாக அரிய தேடல்களே இருந்த நிலையில் ஒருங்கிணைந்த தஞ்சாவூர், ஒருங்கிணைந்த திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய களத்தில் காணப்பட்ட சுமார் 70 புத்தர் சிலைகள், புத்தர் வழிபாடு, வழிபாடு தொடர்பான நம்பிக்கை, பௌத்தத்தின் இறுதிச்சுவடுகள் உள்ளிட்டவற்றைப் பேசினேன். மயிலாதுறைப் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் வந்திருந்த நிலையில் மாணவர்களுக்கும் வரலாற்றின் மீதான ஆர்வம் தேவை என்பதன் முக்கியத்துவத்தினை எடுத்துரைத்தேன். (பேச்சின் முழு வடிவத்தையும் யுடியூப்பில் காணலாம். இணைப்பினைக் கீழே தந்துள்ளேன்)  

பொழிவின் ஒரு கூறாக பள்ளி மாணவர்களுக்கிடையேயான கட்டுரைப்போட்டியில் கலந்துகொண்டு சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் வாய்ப்பினையும் பெற்றேன். "புத்தர் போதித்த வாழ்வியல் நெறிகள்" கட்டுரைப்போட்டியில் 11 பள்ளிகளைச் சேர்ந்த 87 மாணவர்கள் கலந்துகொண்டிருந்ததாகக் கூறினர். முதல் மூன்றிடம் பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது. 


முதலிடம் : சு.சுமன், 12ஆம் வகுப்பு,
திவான் பகதூர் தி.அரங்காச்சாரி தேசிய மேநிலைப்பள்ளி, மயிலாடுதுறை

இரண்டாமிடம் : க.சந்தியா, 9ஆம் வகுப்பு,
குருஞானசம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மயிலாடுதுறை
மூன்றாமிடம் :  ஜெயஸ்ரீ, 9ஆம் வகுப்பு,
அறிவாலயம் மேல்நிலைப்பள்ளி, மயிலாடுதுறை
சிறப்புப்பரிசு :  தொல்காப்பியன், 9ஆம் வகுப்பு, 
அறிவாலயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மயிலாடுதுறை

நிறைவாக 
மருத்துவர் ஆர்.வெங்கடேஷ் ஆவணப்படுத்தலின் அவசியத்தையும், வரலாற்று ஆர்வத்தின் முக்கியத்துவத்தினையும் எடுத்துரைத்ததோடு நன்றி கூறினார்.

 


வரவேற்புரையாற்றியதோடு, நிகழ்ச்சியை தருமை ஆதீன கலைக்கல்லூரி உதவிப்பேராசிரியர் திருமதி பா.ஈஸ்வரி பாஸ்கரன் தொகுத்து வழங்கினார்.

விழாவின் சிறப்பு நிகழ்வாக பொழிவு நிறைவுற்ற பின்னர் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு உரிய பதில் தரப்பட்டது. 




மாணவர்கள் மிகவும் ஆர்வமாகக்  கேட்டதைப் பார்த்தபோது அவர்கள், உரையை கவனித்த விதத்தை உணர முடிந்தது. அமைப்பாளர்கள் மாணவர்கள் கேட்ட கேள்விகளில் சிறந்த கேள்விகளைக் கேட்ட மாணவர்களுக்கு சிறப்புப் பரிசு வழங்கினர்.

தமிழின் சிறப்பினைப் பற்றி ஷாபின் (மூன்றாம் வகுப்பு, குருஞான சம்பந்தம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி) என்ற மழலை மிகவும் அருமையாகப் பேசி அனைவரையும் ஈர்த்தார். 

விழா நிறைவுற்றபின்னர் வந்திருந்த பல மாணவர்கள், தத்தம் பெற்றோர்களுடனும், பள்ளி ஆசிரியர்களுடனும் என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது நெகிழ்வினைத் தந்தது. வேர்கள் பொழிவிற்குச் சென்ற அனுபவம் மனதில் நின்ற அனுபவமானது. 
வேர்கள் அமைப்பினருடன்

உரையினை கீழக்கண்ட இணைப்பில் யுடியூபில் கேட்க : 

 


நன்றி : வேர்கள், ஹோட்டல் சதாபிஷேகம், ஸ்ருதி டிவி

பிற யுட்யூப் பதிவுகள்


1.திரிபீடக தமிழ் நிறுவனம் – சென்னை ‘மானுடம் தேடும் அறம்’ உரை 1/சோழ நாட்டில் பௌத்த களப்பணி முனைவர் ஜம்புலிங்கம்/27.8.2020 (உரை 27.6.2020)


2.அகிம்சை நடையின் இணைவோம் இணைய வழியால் 4/முனைவர் ஜம்புலிங்கம் களப்பணியில் சமணம்/9.8.2020


3.விக்கிப்பீடியாவில்தமிழகக் கோவில்கள் - அனுபவக் கட்டுரைகள்| GCHRG WEBINARS 2020| PART-3 | Webinar 8/6.9.2020


4.புதுவைத் தமிழாசிரியர்கள்-மின்முற்றம்-122 “பொன்னி நாட்டில் பௌத்தம்” முனைவர் ஜம்புலிங்கம்/16.11.2020


1 டிசம்பர் 2020இல் மேம்படுத்தப்பட்டது. 

Comments

  1. மகிழ்வான விடயம் முனைவர் அவர்களுக்கும், சான்றிதழ் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் எமது வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. மகிழ்ந்தேன்
    வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete
  3. உங்கள் உரையைக் கேட்க இதோ இணைப்பிற்குச் செல்கிறேன்.

    சிறப்பான நிகழ்வு பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி முனைவர் ஐயா.

    ReplyDelete
  4. வாழ்த்துகள் ஐயா... இணைப்பிற்கு செல்கிறேன்...

    ReplyDelete
  5. சிறப்பான நிகழ்வு. தங்களுக்கும், மாணவ மாணவியர் அனைவருக்கும் வாழ்த்துகள்!

    உங்கள் உரையைக் கேட்கிறோம்.

    ReplyDelete
  6. சிறப்பான நிகழ்வு. தங்களுக்கும், மாணவ மாணவியர் அனைவருக்கும் வாழ்த்துகள்!

    உங்கள் உரையைக் கேட்கிறோம்.

    ஐயா அது உங்கள் உரையின் காணொளி போலத் தெரியவில்லையே. அழுத்தினால் புகைப்படங்கள் போலத்தானே வருகின்றது.

    ReplyDelete
    Replies
    1. இணைப்பில் காணொளி உள்ளது. பலர் அதனைப் பார்த்து கருத்து கூறியுள்ளனர்.

      Delete
  7. நன்றி ஐயா. காணொளியில் நீங்கள் விவரமாக கலப்பணி அனுபவங்களைப்பற்றி கூறினீர்கள். அத்தனை ஊர்கள், கிராமங்கள், அங்கு அங்கு கண்டெடுக்கப்பட்ட சிலைகளின் அம்சங்களை நினைவில் வைத்திருக்கின்றீர்கள். பார்த்த சில சிலைகள் தற்போது காணாமல் போய்விட்டதாகவும் கூறினீர்கள். அப்படிப்பட்ட பழங்கால சிலைகளை பார்ப்பவர்கள் முடிந்தால் பல கோணங்களிலும் புகைப்படங்கள் எடுத்துகொள்வது நல்லது. சிலைகள் திருடப்பட்டு வெளிநாடுகளில் அருங்களாட்சியங்களில் பொய் சாண்றிதழ்களோடு (provenance) விற்கவும் படுகின்றன. ஆனால புகைப்படங்கள் இருந்தால் ஒரு நாள் அவற்றை மீட்டெடுக்கும் வாய்ப்பு உள்ளது.
    ஆர்வத்துடன் மாணவர்கள் கேள்விகள் கேட்டனர் . பொருமையுடன் அவர்களுக்கு பதில் கூறினீர்கள். மாணவர் ஒருவர் சங்கமித்திரை பற்றி தவராக படித்த கெள்வியை கேட்டார். பள்ளிக்கூட புத்தகத்தில் படித்திருந்தால் அது உண்மையிலேயே பெருந் தவறுதான். இலங்கையில் பிக்குணி சங்கத்தை உருவாக்க அசொக மன்னரின் மகள் சங்கமித்தைரை சென்றார் என்பது வரலாறு.
    மாணவ மாணவியர்கள் "புத்தர் போதித்த வாழ்வியல் நெறிகள்" பற்றி என்ன எழுதியிருப்பார்கள் என்பதை தெரிந்தகொள்ளமுடியவில்லை என்றாலும் இப்படி ஒரு போட்டி நடத்தப்பட்டது என்பதை அறிவதிலும் ஒரு மகிழ்ச்சி. வேர்கள் அமைப்பினருக்கு வாழ்த்துக்கள்.
    சற்று off-topic ஆக செல்வதற்கு மன்னிக்கவும்:
    நிகழ்ச்சி படங்களைப் பார்த்து முதலில் எனக்கு தோன்றியது: தூய்மையான அரங்கம். எளிமையாக ஆனால் அழகாக அலங்கரிக்கப்பட்ட மேடை, ஒட்டடை அற்ற உட்கூரை (ceiling), கண்களுக்கு குளுமையான சுவர் நிறம்.... சுற்றியுள்ள பச்சை செடி கொடி மரங்களும் அழகு... இடத்தை பராமரிப்போருக்கு வாழ்த்துக்கள்.
    புத்தர் கூறியது: "பிக்குகளே மூன்று வகைத்தூய்மை உள்ளன. எந்த மூன்று? உடலில் தூய்மை, மொழியில் தூய்மை, உள்ளத்தில் தூய்மை." (இதிவுத்தகம் itivuttaka #66)
    இக்கருத்து மணிமேகலையில் விவரிக்கப்படுகிறது:
    கொலையே களவே காமத் தீவிழைவு
    உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும்
    பொய்யே குறளை கடுஞ்சொல் பயன் இல்
    சொல் எனச் சொல்லில் தோன்றுவ நான்கும்
    வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சி என்று
    உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும் ... மணிமேகலை காதை 30 வரிகள் 66-71

    Killing, stealing, improper sexual conduct
    are the three kinds of wrongs appearing in a pure body.
    Lies, malicious speech, harsh speech, frivolous speech
    are the four types of wrong speech.
    Greed, hatred and wrong view (delusion)
    are the three kinds of wrong deeds that appear in the mind.

    தணிசாரோ பிக்கு சுற்றத்தூய்மைக்கும் உள்ளத்தூய்மைக்கும் உள்ள தொடர்பினை ஒரு கட்டுரையில் இவ்வாறு விளக்குன்றார் (அவர் விகாரைக்கு தியானம் செய்ய வந்தவர்க்கு தந்த அறிவுரை):
    If you're sloppy with things outside, you're going to be sloppy with your meditation. It's a basic principle. You want to learn how to be meticulous, clean, neat, alert in all the things you do. In that way, the activities become not a chore to be disposed of as quickly as possible, or something just getting in the way of your meditation. They become part of the meditation. After all the word for meditation is bhavana: It means "to develop." You're developing qualities of mind. And the mind that cleans your room is the same mind that tries to clean itself out. If it's sloppy in cleaning the room, it's going to be sloppy in cleaning itself out. So you've got to take these things seriously. (Thanissaro Bhikkhu - Meditations 4 'Cleanliness is Next to Mindfulness')
    அன்புடன்,
    அரசு

    ReplyDelete
  8. ஓர் அருமையான ஆய்வுக்கட்டுரையைப் போன்ற, விளக்கமான, உங்களின் மறுமொழிக்கு மனமார்ந்த நன்றி. உங்களைப் போன்றோரின் வாழ்த்துகள் என் ஆய்விற்கு மிகவும் துணை நிற்கிறது ஐயா.

    ReplyDelete
  9. இணைப்பு எங்கே சார்

    ReplyDelete
  10. பொன்னி நாட்டில் பௌத்தம் என்னும் லிங்கில்உள்ளது ஆனால் ஒரு மணி நெரத்துக்கும்மேல் இருக்கும்போலத்தெரிகிறது சாவகாச மாக வரவேண்டும்

    ReplyDelete

Post a Comment