நாளிதழ் செய்தி : உள்ளிக்கோட்டை புத்தர் : ஜனவரி 2005

1993 முதல் மேற்கொண்டு வருகின்ற களப்பணியின்போது மங்கலம், அய்யம்பேட்டை, புதூர், கோபிநாதப்பெருமாள் கோயில், குடவாசல், சுந்தரபாண்டியன்பட்டனம், திருநாட்டியத்தான்குடி, உள்ளிக்கோட்டை, குழுமூர், ராசேந்திரப்பட்டினம், வளையமாபுரம், திருச்சி, கண்டிரமாணிக்கம், கிராந்தி, மணலூர், பிள்ளைபாளையம்  ஆகிய இடங்களில்  புத்தர் சிலைகள் தனியாகவும், பிற அறிஞர்களோடு இணைந்தும் கண்டுபிடிக்கப்பட்டன.

முந்தைய பதிவுகளில் திருநாட்டியத்தான்குடி வரையிலான இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலைகளைப் பற்றிய நாளிதழ் செய்திகளைக் கண்டோம். இப்பதிவில் உள்ளிக்கோட்டையில் திரு மாதவகுமாரசுவாமி அவர்கள் தந்த தகவலின் அடிப்படையில் மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டையில் 2005இல் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலை தொடர்பாக வெளியான நாளிதழ் செய்திகளைக் காண்போம்.  

செப்டம்பர் 2012இல் மேற்கொண்ட கள ஆய்வின்போது இச்சிலையை அங்குக் காணவில்லை.  
நன்றி : 
சிலை இருப்பதைத் தெரிவித்து உதவிய மாதவகுமாரசுவாமி
செய்தியை வெளியிட்ட நாளிதழ்கள்


கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருகின்ற சோழ நாட்டில் பௌத்தம் என்ற என்னுடைய இந்த இவ்வலைப்பூவில் கட்டுரைகள், பேட்டிகள், அணிந்துரைகள் என்ற பக்கத்தை 1,00,000க்கு மேற்பட்ட பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர் என்பதைப் பகிர்வதில் மகிழ்கிறேன். சாதாரணமாக ஒரு வலைப்பூவில் எழுதுவதற்கும், ஆய்வு தொடர்பான வலைப்பூவில் எழுதுவதற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்கிறேன். நாளுக்கு நாள் மேம்படுகின்ற செய்தியானது ஆய்வுத்தளத்தில் முக்கியமான இடத்தைப் பெறுகிறது என்ற அடிப்படையில் முந்தைய பதிவுகளில் சிறிய மாற்றம் இருந்தால்கூட அதனைக் கட்டுரையில் சேர்த்துவிட்டு, கட்டுரையின் நிறைவுப்பகுதியில் மேம்படுத்தப்பட்ட நாளினைக் குறிப்பிடுகிறேன். இது ஆய்வாளர்களுக்கு மிகவும் பயன்படுவதாகக் கூறுகின்றனர். ஆய்வு தொடர்பான இந்த வலைப்பூவிற்கு ஆதரவு தருகின்ற நண்பர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்கள், ஆர்வலர்கள் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி. உங்கள் அனைவருடைய ஒத்துழைப்புடனும் இத்தளத்தில் என் பதிவினைத் தொடர்வேன், ஓர் ஆய்வாளனாக.
Feel happy to share that the page entitled articles, interviews and prefaces containing the the tiles of my write ups has crossed 1 lakh page views. I thank one and all. 

Comments

  1. தங்கள் பணி சிறப்புற வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. தகவல்கள் சிறப்பு. 2012-இல் அங்கே அந்த சிலை இல்லை என்பது வருத்தமான விஷயம்.

    ReplyDelete

Post a Comment