நாளிதழ் செய்தி : சுந்தரபாண்டியன்பட்டனம் புத்தர் : 2002
2019 ஜனவரியுடன் இவ்வலைப்பூவில் எட்டு ஆண்டுகளை நிறைவு செய்கிறேன். பிப்ரவரி 2019 முதல் ஒன்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன்.
என் ஆய்விற்குத் துணைநிற்கும் அனைவருக்கும்
மனமார்ந்த நன்றி.
என் ஆய்விற்குத் துணைநிற்கும் அனைவருக்கும்
மனமார்ந்த நன்றி.
1993 முதல் மேற்கொண்டு வருகின்ற களப்பணியின்போது கீழ்க்கண்ட புத்தர்சிலைகள் தனியாகவும், பிற அறிஞர்களோடு இணைந்தும் கண்டுபிடிக்கப்பட்டன.
4.கோபிநாதப்பெருமாள்கோயில்(2002) (தலையின்றி)
5.கோபிநாதப்பெருமாள்கோயில் (2002) (இடுப்புப்பகுதி மட்டும்) (நாளிதழில் வெளிவரவில்லை)
5.கோபிநாதப்பெருமாள்கோயில் (2002) (இடுப்புப்பகுதி மட்டும்) (நாளிதழில் வெளிவரவில்லை)
7.சுந்தரபாண்டியன்பட்டனம்
(2002)
8.திருநாட்டியத்தான்குடி
(2003)
9.உள்ளிக்கோட்டை
(2005)
10.குழுமூர் (2006)
11. ராசேந்திரப்பட்டினம்
(2007)
12.வளையமாபுரம்
(2007)
13.திருச்சி(2008)
14. கண்டிரமாணிக்கம் (2012)
15. கிராந்தி (2013)
16.மணலூர் (2015)
14. கண்டிரமாணிக்கம் (2012)
15. கிராந்தி (2013)
16.மணலூர் (2015)
மேற்கண்டவற்றுள் குடவாசல் புத்தர் வரையிலான நாளிதழ் செய்திகளைப் பார்த்துள்ளோம். இப்பதிவில் சுந்தரபாண்டியன்பட்டினத்தில் 2002இல் கண்ட புத்தர் சிலையைப் பற்றி நாளிதழ்களில் வெளியான செய்திகளைக் காண்போம்.
பேராசிரியர் முனைவர் சந்திரபோஸ் உதவியுடன் புதுக்கோட்டை ராமநாதபுரம் எல்லையில் சுந்தரபாண்டியன்பட்டனத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் காமாட்சியம்மன் கோயில் வளாகத்தில் ஒரு புத்தர் சிலையைக் களப்பணியின்போது முதன்முதலாகக் காணமுடிந்தது. இச்சிலை நின்ற நிலையில் இருந்தது. களப்பணியின்போது முதன்முதலாக நின்ற நிலையில் காணப்பட்ட புத்தர் சிலை இதுவாகும். சோழ நாட்டில் நின்ற நிலையில் உள்ள புத்தர் சிலைகள் மிகவும் குறைவே. வரலாற்றறிஞர் முனைவர் ராஜா முகமது இச்சிலையைப் பற்றி விவாதித்துள்ளார். சோழ நாட்டைச் சேர்ந்த, ஆய்வுப்பகுதியில் இல்லாத இடமாக இருந்தாலும் அருகில் உள்ள மாவட்டம் என்ற நிலையில் இவ்விடத்தில் களப்பணி மேற்கொள்ளப்பட்டது. நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனியைப் போல இச்சிலை காணப்படும்.
நன்றி : மேற்கண்ட இதழ்கள்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDeleteவலைய்பூவில் நவரத்தின ஆண்டை தொடும் முனைவர் அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.
// 2019 ஜனவரியுடன் இவ்வலைப்பூவில் எட்டு ஆண்டுகளை நிறைவு செய்கிறேன். //
ReplyDeleteஆஹா, மிக்க மகிழ்ச்சி. மனம் நிறைந்த நல்வாழ்த்துகள். மேலும் மேலும் தங்களின் எழுத்துப்பணிகள் வெற்றிகரமாக நடக்கட்டும்.
02.01.2011 அன்று வலைப்பூவில், முதன் முதலாக எழுத ஆரம்பித்த எனக்கும் 8 முழு ஆண்டுகள் முடிந்து இன்றுடன் மேலும் எட்டு நாட்களும் ஆகியுள்ளன.
எட்டு ஆண்டுகள் தொடர்ந்து விஷய ஞானத்தோடு
ReplyDeleteஇளமைத் துடிப்போடு தொடர்வது நிச்சயம்
ஒரு இமாலயச் சாதனையே
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
இன்னும் பல ஆண்டுகள் தாங்கள் எழுத்துலகில் சாதனை புரிய இறைவனை வேண்டுகிறேன்
ReplyDeleteஅர்த்தமுள்ள பதிவுகளை எழுதி எட்டு ஆண்டுகள் தொடர்ந்து எழுதி வருவது ஒரு சாதனையே! மனமார்ந்த வாழ்த்துகள்.
ReplyDeleteசரியான வார்த்தைகள். நான் உங்களுக்கு இந்த விசயத்தில் (மட்டும்) சீனியர். ஒன்பதில் இருந்து பத்து.
Deleteபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஒன்பதாம் ஆண்டு ஆரம்பத்துக்கும் வாழ்த்துகள். இன்னும் பல்லாண்டு உங்கள் ஆய்வுகளும் எழுத்துகளும் உலா வர வாழ்த்துக்கள். நிற்கும் புத்தர் சிலை வெகு அழகு.
ReplyDeleteமேலும் தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள், ஐயா
ReplyDeleteஎட்டு ஆண்டுகள் பூர்த்தியானது குறித்து மிக மகிழ்ச்சி முனைவர் ஐயா. தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.
ReplyDeleteசாதனைகள் தொடர வாழ்த்துகள்
ReplyDeleteஐயா, வலைப்பூ எழுத வந்த பலரும் இன்று துவிட்டர், உயூடியூபு என இடம் மாறி விட்ட நிலையில் எட்டு ஆண்டுகளாகத் தாங்கள் தொடர்ந்து வலைப்பூ எழுதி வருவது மிகப் பெரிய செயல். அதுவும் களமிறங்கி ஆய்வு செய்யும் அறிஞரான தாங்கள் தங்கள் அரிய கண்டுபிடிப்புகளைப் பற்றி வெளியிட நாளிதழ்களும் ஏடுகளும் காத்திருக்கும் நிலையில் இப்படித் தொடர்ந்து வலைப்பூவில் எழுதி வருவது என்பது தங்கள் எளிமையைக் காட்டுகிறது. ஆய்வறிஞரான தங்களை வாழ்த்தும் வயதில்லை; எனவே வணங்கிப் போற்றுகிறேன்! தங்கள் அரிய ஆய்வுகளும் எழுத்தும் தொடர வேண்டுகிறேன்! மிக்க மகிழ்ச்சி!
ReplyDeleteMr Koil Pillai (thro email: koilpillais@gmail.com)
ReplyDeleteCongratulations Sir for having completed 8 years.