Posts

Showing posts from May, 2017

நாளிதழ் செய்தி : கோபிநாதப்பெருமாள்கோயில் புத்தர் : பிப்ரவரி 2002

Image
28 ஏப்ரல் 2017 அன்று நடைபெற்ற பணிநிறைவு வாழ்த்தியல் விழாவில், என் மனைவி பாக்கியவதி எழுதிய நூலை பல்கலைக்கழகத்துணைவேந்தர் பேராசிரியர் க.பாஸ்கரன் அவர்கள் வெளியிட வரலாற்றறிஞர் முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் பெறுகிறார். அருகே பதிவாளரும், நிதியலுவலரும் உள்ளனர். உதவிப்பதிவாளர் பதவி உயர்வு பெற்ற செய்தியைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.  விழாவிற்கு வருகை தந்தோருக்கும், வாழ்த்து தெரிவித்தோருக்கும் நன்றி. விழாவின்போது வழங்கப்பட்ட நினைவுப்பரிசு கடந்த இரு பதிவுகளாக ஆய்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலைகளைப் பற்றி வெளியான நாளிதழ்கள் செய்திகளைப் பற்றி விவாதித்து வருகிறோம். அவ்வகையில் இந்த மாதம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் பட்டீஸ்வரம் அருகே கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலையைக் காண்போம். ஆய்வின்போது 2002இல் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் பட்டீஸ்வரம் அருகே கோபிநாதப்பெருமாள் கோயில் என்னுமிடத்தருகே கண்டுபிடிக்கப்பட்டதாகும். பிறகு சில களப்பணிகளுக்குப் பிறகு அங்கு சென்றபோது  அவ்விடத்தில் காணப்படவில்லை என்பது வேதனையே. இச்செய்தி வெளியானதைத் தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தா