நாளிதழ் செய்தி : புதூர் புத்தர் : அக்டோபர் 2000
ஆய்வின்போது 2000இல் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் புதூர் என்னுமிடத்தில் வழிபாட்டில் உள்ளதாகும். இந்த சிலையைப் பார்க்க சுமார் 25 கிமீ மிதிவண்டியில் நான் சென்றது மறக்கமுடியாதது.
இச் செய்தி தூர்தர்ஷன் தொலைகாட்சியிலும், சன் தொலைக்காட்சியிலும் வெளியானதைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன். அப்போது வீட்டில் இணைய வசதி வீடுகளுக்கு பரவலாக கிடைக்காத நிலையில், இச்செய்தி தொடர்பான நறுக்கை இலண்டன் விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகக் காப்பாளர் ஜான் கய் அவர்களுக்கு அனுப்புவதற்காக இணைய மையத்திற்குச் சென்றேன். அங்கிருந்த பணியாளர் எனக்காக ஒரு மின்னஞ்சலை உருவாக்கித் தந்து அதனை அவருக்கு அனுப்பினார். அனுப்பும்போது அந்த சிலையைப் பற்றிய செய்தியை சென்னைத் தொலைக்காட்சியில் தான் பார்த்ததாகவும், தஞ்சையிலுள்ள சென்னைத் தொலைக்காட்சி நிருபர் தன்னுடைய தந்தை என்றும் அவர் கூறினார். பின்னர் அவரைக் கண்டு சந்தித்து, அவருக்கு நன்றி கூறினேன்.
இந்த புத்தரைக் கண்டுபிடிக்கச் சென்ற அனுபவத்தை பௌத்த சுவட்டைத் தேடி : புதூர் என்ற தலைப்பில் முன்னரே படித்துள்ளோம். அந்த புத்தர் சிலை தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்திகளைக் காண்போம். வெளியிட்ட அனைத்து இதழ்களுக்கும் என் ஆய்விற்குத் துணை நிற்கும் ஊடக நண்பர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
![]() | ||
திருவாரூர் அருகே புத்தர் வழிபாடு, தினமணி, 31.10.2000
|
![]() |
திருவாரூர் அருகே வித்தியாசமான 5 அடி உயர புத்தர் சிலை கண்டுபிடிப்பு, தினபூமி, 1.11.2000 |
![]() |
திருவாரூர் அருகே புத்தர் சிலை கண்டுபிடிப்பு, தினகரன், 6.11.2000 |
![]() |
பண்டைய சோழ நாட்டில் புத்தமத வழிபாடு, மாலைச்சுடர், 30.11.2000 |
25 கிமீ என்னுடன் மிதிவண்டியில் துணைக்கு வந்து புத்தரைக் கண்டுபிடிக்க உதவிய மழவராயநல்லூர் சித்தார்த்தா சமூகக் கல்விக்கழகத்தைச் சேர்ந்த திரு சிங்காரவேலன், திரு விசுவநாதன், திரு சிவகுருநாதன் மற்றும் புதூர் கிராம மக்கள், மற்றும் மேற்கண்ட நாளிதழ்கள்
1993 முதல் களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர், தீர்த்தங்கரர் சிலைகளைப் பற்றிய விவரங்களை பின்வரும் இணைப்பில் காணலாம்.
ReplyDeleteஅருமையான தகவல்
தங்கள் பணி தொடரட்டும்!
வாழ்த்துக்கள் ஐயா
ReplyDeleteமுனைவர் மேலும் தொடர வாழ்த்துகள்
ReplyDeleteத.ம.1
தங்கள் பணி தொடரட்டும்....
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா...
தொழிலில் ஓய்வு பெற்றாலும் இப்பணியைத் தொடர வாழ்த்துகள்.
ReplyDeleteஎந்தச் செய்தியும் விடுபடாமல் நினைவில் இருத்திப் பதிவிடும் ப்சாங்கு பாராட்டத்தக்கதே
ReplyDeleteமகிழ்ச்சி அய்யா...
ReplyDeleteதங்கள் பணி தொடரட்டும்....
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா
A colossal recognition for hard work done
ReplyDelete