Posts

Showing posts from April, 2017

நாளிதழ் செய்தி : புதூர் புத்தர் : அக்டோபர் 2000

Image
ஆய்வின்போது 2000இல் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் புதூர் என்னுமிடத்தில் வழிபாட்டில் உள்ளதாகும். இந்த சிலையைப் பார்க்க சுமார் 25 கிமீ மிதிவண்டியில் நான் சென்றது மறக்கமுடியாதது.  இச் செய்தி தூர்தர்ஷன் தொலைகாட்சியிலும், சன் தொலைக்காட்சியிலும் வெளியானதைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.   அப்போது வீட்டில் இணைய வசதி வீடுகளுக்கு பரவலாக கிடைக்காத நிலையில், இச்செய்தி தொடர்பான நறுக்கை இலண்டன் விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகக் காப்பாளர் ஜான் கய் அவர்களுக்கு அனுப்புவதற்காக இணைய மையத்திற்குச் சென்றேன். அங்கிருந்த பணியாளர் எனக்காக ஒரு மின்னஞ்சலை உருவாக்கித் தந்து அதனை அவருக்கு அனுப்பினார். அனுப்பும்போது அந்த சிலையைப் பற்றிய செய்தியை சென்னைத் தொலைக்காட்சியில் தான் பார்த்ததாகவும், தஞ்சையிலுள்ள சென்னைத் தொலைக்காட்சி நிருபர் தன்னுடைய தந்தை என்றும் அவர் கூறினார். பின்னர் அவரைக் கண்டு சந்தித்து, அவருக்கு நன்றி கூறினேன். இந்த புத்தரைக் கண்டுபிடிக்கச் சென்ற அனுபவத்தை  பௌத்த சுவட்டைத் தேடி : புதூர்  என்ற தலைப்பில் முன்னரே படித்துள்ளோம். அந்த புத்தர் சிலை தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்திகளைக் காண்போம