களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலைகள் (1993-2012) - தஞ்சாவூர் மாவட்டம்
1993இல் ஆய்வில் அடியெடுத்துவைத்தபோது முதன்முதலாக அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புத்தர் சிலைகளைப் பார்க்க முடிவெடுத்தேன். தஞ்சாவூர் கலைக்கூடம், தமிழ்ப்பல்கலைக்கழக அருங்காட்சியகம், சென்னை அரசு அருங்காட்சியகம், தஞ்சாவூர் தொல் பொருள் ஆய்வுத்துறை ஆகிய இடங்களில் சோழ நாட்டைச் சேர்ந்த புத்தர் சிலைகளைப் பார்த்தபின் முந்தைய அறிஞர்கள் கூறியிருந்த சிலைகளைப் பார்த்தேன். அவற்றில் சில சிலைகள் தற்போது காணப்பெறவில்லை. இவ்வாறான பயணத்தின்போது ஆங்காங்கே விசாரித்துக்கொண்டே சென்றபோது புதியதாக இரு புத்தர் கற்சிலைகள் மற்றும் ஒரு புத்த செப்புத்திருமேனியைப் பற்றிய தகவல்களைப் பெற முடிந்தது.
அய்யம்பேட்டை (1999)
அய்யம்பேட்டை நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனி (1999) புகைப்படம் ஜம்புலிங்கம் |
கோபிநாதப்பெருமாள்கோயில் (பிப்ரவரி 2002) ஆய்வு தொடங்கியது பட்டீஸ்வரம், பழையாறை, திருவலஞசுழி, சோழன்மாளிகை, முழையூர் உள்ளிட்ட பல இடங்களில் புத்தர் சிலைகள் இருப்பதைக் கேள்விப்பட்டபோதிலும் அந்தந்த இடங்களில் உள்ள புத்தர் சிலைகளைப் பற்றி அறியவும், புதிய சிலைகளைக் கண்டுபிடிக்கவும் தொடர்ந்து களப்பணியினை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அவ்வாறாக பிப்ரவரி 2002இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு களப்பணியின்போது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் பட்டீஸ்வரம்-திருவலஞ்சுழி சாலையில் பட்டீஸ்வரத்திலிருந்து 2 கிமீ தொலைவிலுள்ள கோபிநாதப்பெருமாள் என்னுமிடத்தருகே ஒரு தென்னந்தோப்பில் தலையில்லாத புத்தர் சிலையைக் காணமுடிந்தது. பீடமின்றி உள்ள இச்சிலையின் தலைப்பகுதி காணப்படவில்லை. அமர்ந்த பத்மாசன நிலையில் தியான கோலத்தில் மார்பில் மேலாடை, வலக்கரத்தில் தர்மசக்கரக்குறி, திரண்ட மார்பு, திண்ணிய தோள்கள் போன்ற வழக்கமான கூறுகளுடன் இச்சிலை இருந்தது.
பட்டீஸ்வரம் அருகில் புத்தர் (பிப்ரவரி 2002) புகைப்படம் ஜம்புலிங்கம் |
ஆய்வின்போது புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மேற்கண்ட சிலைகள் உட்பட தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு செப்புத்திருமேனி மற்றும் 17 புத்தர் சிலைகளை பற்றிய குறிப்புகள் உள்ளன. தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டுமே அதிகமான எண்ணிக்கையிலான புத்தர் சிலைகள் காணப்படுகின்றன. இவற்றைக் காணும்போது பெற்ற அனுபவங்களைக் குறித்து பிறிதொரு பதிவில் விவாதிப்போம்.
நன்றி : அய்யம்பேட்டையில் தனியாரிடம் வழிபாட்டில் இருந்த நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனியைக் காண உதவிய திரு அய்யம்பேட்டை செல்வராஜ்.
கோபிநாதப்பெருமாள்கோயில் அருகே கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலையைப் பற்றிய செய்தியை வெளியிட்ட கீழ்க்கண்ட பத்திரிக்கைகளுக்கும் என் நன்றி.
படத்துடன் செய்தி, தமிழ்முரசு, 1.2.2002
பட்டீஸ்வரத்தில் புத்தர் சிலை கண்டுபிடிப்பு, தினமலர், 2.2.2002
பட்டீஸ்வரம் அருகே புத்தர் சிலை கண்டுபிடிப்பு, தினத்தந்தி, 2.2.2002
பட்டீஸ்வரம் அருகே சோழர் கால புத்தர் சிலை கண்டுபிடிப்பு, தினமணி, 3.2.2002
புத்தர் சிலை கண்டுபிடிப்பு, தினகரன், 3.2.2002
பட்டீஸ்வரம் அருகே அழகிய புத்தர் சிலை, தினபூமி, 3.2.2002
தஞ்சை அருகே புத்தர் சிலை கண்டெடுப்பு, காலைக்கதிர், 3.2.2002
கீழ்க்கண்ட முகநூலில் கண்டுபிடிப்பு பற்றிய செய்திகளைக் காணலாம்.
http://www.facebook.com/buddhismincholacountry
-----------------------------------------------------------------------------------------------------------------------
புத்தர் அறவுரை
இவ்வுலகில் நாம் இறக்கப்போகிறோம் எனப் பிறர் அறியமாட்டார்கள். அதனை அறிந்தவர்கள் கலகம் செய்வதை நிறுத்திவிடுகின்றனர்.
சூழல்
-தம்ம பதம் 6
கோசாம்பியில் புத்தர் இருந்தபோது இரண்டு பிக்குகளிடையே தோன்றிய சண்டை, ஏனைய பிக்குகளையும் ஊர் மக்களையும் இரு குழுவினராகப் பிரித்துச் சண்டையிடும்படியாக வளர்ந்தது. இதையறிந்த புத்தர் அவர்களுக்குப் பல வகையில் அறிவுரை கூறியும் அவர்கள் உணர்ந்து திருந்தினார்களில்லை. எனவே, இவர்கள் மீது வருத்தமுற்ற புத்தர் காட்டில் தனியாக வாழச் சென்றுவிட்டார். இதனை அறிந்த பிக்குகள் திருந்தி, புத்தரை அணுகி மன்னிப்புக் கேட்டு நின்றனர். அப்பொழுது புத்தர் கூறியது இப்பாடல்.
(தம்ம பதம், தமிழாக்கம்: நா.செயப்பிரகாசு, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2002)
Buddha statues found during field study (1993-2012) - Thanjavur district
During the field study carried out in Thanjavur district during the last two decades two granite Buddha statues at Gopinathaperumalkoil near Pattiswaram and one Nagapattinam Buddha bronze in Ayyampet were found by me. In Chola country, Thanjavur district has maximum number of Buddha statues. English version of the article will appear on 15th May.
உங்களுடன் பகிர்ந்துகொள்ள மற்றொரு செய்தி
அண்மையில் நாங்கள் மந்த்ராலயம், ஹம்பி உள்ளிட்ட இடங்களுக்குச் சுற்றுலா சென்றுவந்தது தொடர்பாக என் மனைவி திருமதி பாக்கியவதி எழுதியுள்ள பயணக்கட்டுரை தினமணி 28.4.2013 இதழில் வெளியாகியுள்ளது. கீழேயுள்ள தொடர்பில் சொடுக்கினால் கட்டுரையைப் பார்க்கலாம், படிக்கலாம். வாருங்கள்.
11.5.2013இல் மேம்படுத்தப்பட்டது
During the field study carried out in Thanjavur district during the last two decades two granite Buddha statues at Gopinathaperumalkoil near Pattiswaram and one Nagapattinam Buddha bronze in Ayyampet were found by me. In Chola country, Thanjavur district has maximum number of Buddha statues. English version of the article will appear on 15th May.
உங்களுடன் பகிர்ந்துகொள்ள மற்றொரு செய்தி
அண்மையில் நாங்கள் மந்த்ராலயம், ஹம்பி உள்ளிட்ட இடங்களுக்குச் சுற்றுலா சென்றுவந்தது தொடர்பாக என் மனைவி திருமதி பாக்கியவதி எழுதியுள்ள பயணக்கட்டுரை தினமணி 28.4.2013 இதழில் வெளியாகியுள்ளது. கீழேயுள்ள தொடர்பில் சொடுக்கினால் கட்டுரையைப் பார்க்கலாம், படிக்கலாம். வாருங்கள்.
11.5.2013இல் மேம்படுத்தப்பட்டது
சிறப்பான தகவல்களுக்கு நன்றி... முடிவில் நல்லதொரு கருத்து... தொடர வாழ்த்துக்கள் ஐயா...
ReplyDeleteஅய்யம்பேட்டையில், புத்தர் முனீஸ்வரராய் மாறிய செய்தி அறிந்து வியந்தேன். மக்கள் மதம் என்னும் வேறுபாட்டிற்குள் சிக்குவதில்லை என்பதைத் தான் இந்நிகழ்வு உணர்ந்துகின்றது என்று எண்ணுகின்றேன். மக்களுக்குத் தேவையானதெல்லாம், தம்மைக் காக்க தெய்வங்களே அன்றி மதங்கலல்ல.
ReplyDeleteகள ஆய்வின்போது காணப்படும் சிலைகள், சில மாதங்களுக்குப் பின் மறைந்துவிடுவது வேடிக்கையாக இருக்கிறது. சிலை திருட்டுக் கும்பல் ஒன்று தங்களைப் பின் தொடர்கிறதோ என்று தோன்றுகிறது. இப்படிச் செய்தாலென்ன? ஒரு சிலையைக் கண்டுபிடித்த உடனே, அதுபற்றிப் புகைபடத்துடனும் சில சாட்சிகளுடனும், உள்ளூர்ப் பஞ்சாயத்துத்திற்குத் தெரியப்படுத்தினால், அந்த ஆதாரத்தைக் கொண்டு, ஒருவேளை அந்தச் சிலை திருட்டுப்போனால் கண்டுபிடிக்க ஏதுவாகுமே! மன்னிக்கவும், சுயநலமின்றிக் கள ஆய்வில் ஈடுபட்டு வரும் தங்களுக்கு அதிகப்படியான சிரமங்களைத் தருவது என் நோக்கமல்ல.
ReplyDeleteவாழ்த்துகள் ... மிகச்சிறப்பான ஆய்வு..
ReplyDeleteதமிழ் இயலன்
ஐயா எங்கள் பகுதியில் (தூத்துக்குடி மாவட்டம்) புத்தன்தருவை என்ற ஊர் உள்ளது.
ReplyDelete