Posts

Showing posts from 2017

அகிம்சை நடை : 19 நவம்பர் 2017

Image
2017 அக்டோபர் இறுதி வாரத்தில் தமிழ்ப்பண்டிதர் நண்பர் திரு மணி.மாறன் தொலைபேசிவழி தொடர்புகொண்டு "தஞ்சாவூர்ப் பகுதியிலுள்ள சமண தீர்த்தங்கரர் சிலைகளைப் பார்ப்பதற்காக சமண அமைப்பினர் சென்னையிலிருந்து 5 நவம்பர் 2017 அன்று வருகின்றார்கள். திரு  தில்லை கோவிந்தராஜனிடம் இதுபற்றிக் கூறியுள்ளேன்.  நாமும் அவர்களோடு கலந்துகொள்வோம் "  என்று தெரிவித்திருந்தார். அதன்படி நாங்கள் மூவரும் செல்வதாகத் திட்டமிட்டோம். மழையின் காரணமாக அப்பயணம் ஒத்திவைக்கப்பட்டதை அறிந்தோம். 19 நவம்பர் 2017இல் இப்பயணம் மேற்கொள்ளப்படவுள்ளதை திரு அப்பாண்டைராஜன் உறுதி செய்தார். அவருடைய தலைமையில் 19 நவம்பர் 2017 காலை 6.45 மணியளவில்  சுமார் 20 பேர் கொண்ட குழுவினர்  தஞ்சாவூர் தெற்கு வீதியிலிருந்து வேனில் கிளம்பினோம்.  முன்னர் வருவதாக இருந்த மணி.மாறனும், தில்லை கோவிந்தராஜனும் விடுப்பு எடுக்க இயலா நிலை மற்றும் அவசரப்பணி காரணமாக வர இயலாமல் போனது.    பயணத்தின்போது அவர் அகிம்சை நடையைப் பற்றியும் அவர்களுடைய செயல்பாடுகளைப் பற்றியும் கூறிக்கொண்டே வந்தார். அவர் கூறிய பின்னர் அகிம்சை நடை தொடர்பான விவரங்களை முகநூல் பக்கங்களிலிருந

திருச்சி மகாபோதி பௌத்த சங்கம் : 3 நவம்பர் 2017 : சிறப்புரை

Image
சோழ நாட்டில் பௌத்தம் என்ற வலைப்பூவில் 100ஆவது பதிவு எழுத்திற்குத் துணைநிற்கும் வலைப்பதிவர்கள், நண்பர்கள், உறவினர்கள்,  ஊடகத்துறை நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. சில வாரங்களுக்கு முன்னர் திருச்சி மகாபோதி பௌத்த சங்கத்தைச் சேர்ந்த நண்பர்கள் என் வலைத்தளத்தினை தொடர்ந்து வாசித்து வருவதாகவும், நான் குறிப்பிட்டுள்ள பெரண்டாக்கோட்டை புத்தரைக் காணவேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்து, அந்த இடம் இருக்கும் இடத்தைத் தெரிவிக்கும்படிக் கேட்டிருந்தனர். அவர்கள் வரும்போது நானும் அவர்களுடன் வந்து அந்த புத்தர் சிலையைப் பார்க்கவேண்டும் என்றும் கேட்டிருந்தனர். என்னுடைய சொந்தப் பணிகள் காரணமாக நான் வர இயலா நிலையைத் தெரிவித்திருந்தேன். அவர்கள் குழுவாக அங்கு சென்று பெரண்டாக்கோட்டையிலுள்ள புத்தரைப் பார்த்து வந்த அனுபவங்களை என்னிடம் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களுடைய சங்கத்தில் நடைபெறவுள்ள 23ஆவது பௌர்ணமிப் பெருவிழாவில் கலந்துகொண்டு என் பௌத்த ஆய்வு தொடர்பாக சிறப்புரையாற்றும்படி அழைப்பு விடுத்தனர்.  குறுகிய கால இடைவெளியில் நண்பர்களுக்குத் தெரிவிக்க இயலா நிலையில் நண்பர் திரு தமிழ் இளங்கோ அவர்களிடம

மீண்டும் கவிநாடு சமணர்

Image
அக்டோபர் 2013இல் புதுக்கோட்டை அருகே சமணர் சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. முனைவர் சந்திரபோஸ் அவர்கள் பார்க்கச் சென்றபோது தலையுடன் இருந்த சிலை, சில நாள்கள் கழித்து அவரோடு நான் சென்றபோது தலையில்லாமல் இருந்தது.  அந்த சிலை புத்தர் சிலை என்று கூறப்பட்டு, பின்னர் களப்பணியின்போது சமண தீர்த்தங்கரர் என்று உறுதி செய்யப்பட்டது.   அந்த சிலையின் கண்டுபிடிப்பு தொடர்பான அனுபவங்களை  பௌத்த சுவட்டைத் தேடி : கவிநாடு   என்ற தலைப்பில் முன்னர் வாசித்துள்ளோம்.  2013இல் கவிநாடு சமணர் சிலையுடன், புகைப்படம் நன்றி: முனைவர் சந்திரபோஸ் முதன்முதலாக  அக்டோபர் 2013இல் கண்டுபிடிக்கப்பட்டபோது  நாளிதழ்களில் வந்த செய்திகள் (தினமணி, தி இந்து, தினத்தந்தி, தினகரன்,  Times of India, The Hindu,  The New Indian Express)   1 அக்டோபர் 2017 அன்று  அச்சிலையின் தலைப்பகுதி புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டதை திரு கஸ்தூரிரங்கன் அவர்களின் முகநூல் பதிவு வழியாக அறிந்தேன். தொலைபேசிவழி தொடர்பு கொண்டு அவருக்கும் மரபு நடை குழுவினருக்கும் நன்றி தெரிவித்தேன்.  தொடர்ந்து முக நூலிலும் ப