Posts

Showing posts from August, 2016

புத்த தம்மம் அடிப்படைக்கொள்கைகள்

Image
கடந்த பதிவில் களப்பணி சென்றுவந்த நிலையில் தற்போது பௌத்தக் கொள்கைகள் தொடர்பான ஒரு நூலைப் பார்ப்போம். ஆய்வில் சேர்ந்த காலகட்டத்தில் (1993) நான் படித்த நூல்களில் ஒன்று பௌத்த அடிப்படைக் கொள்கைகளைக் கொண்ட புத்த தம்மம் அடிப்படைக்கொள்கைகள் என்னும் நூல். பௌத்தக் கொள்கைகளை மிகவும் எளிதாக இந்நூல் முன்வைக்கிறது. புத்தரும் பவுத்தமும், புத்தரின் வாழ்க்கை, தம்மம், சில அடிப்படை போதனைகள், நான்கு உன்னத வாய்மைகள், உன்னத எண்வழிப்பாதை, மனித ஆளுமையின் பகுப்பாய்வு, இருப்பின் உண்மை நிலை, மறுபிறப்பு, தியானம், நிப்பாணம், அறவோர், சங்கம் போன்றவை உள்ளிட்ட 21 தலைப்புகளைக் கொண்டமைந்துள்ளது.  இந்நூலில் காணப்படும் சில கருத்துகளைக் காண்போம்.      புத்தரின் போதனைகள் கற்கத்தக்கன. பயிலத்தக்கன. உணரத்தக்கன. நடைமுறைப்படுத்துதலும், உணர்தலும் வலியுறுத்தப்படுகின்றன. ஏனெனில் வை உடனுக்குடன் பயனளிக்கின்றன. (ப.8) ஒருவர் ஒரு கயிற்கைக் கண்டு பாம்பென எண்ணிக்கொண்டால் அங்கே அச்சம், சலனம், கவலை, துன்பம் அனைத்தும் தோன்றுகிறது. இருந்தாலும், அது உண்மையில் ஒரு துண்டுக்கயிறே என்று அவர் அறியமுற்படும்போது அச்சம், சலனம், கவலை, துன