Posts

Showing posts from October, 2015

பௌத்த நல்லிணக்க சிந்தனைகள்

Image
முந்தைய பதிவுகளில் பௌத்தம் தொடர்பாக களப்பணிகள் குறித்தும்,  பௌத்தம் தொடர்பாக வெளிவந்த நூல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. இப்பதிவில் பௌத்தம் போற்றும் நல்லிணக்கச் சிந்தனைகளைக் காண்போம். பௌத்தம் போதித்த முதன்மையான நன்னடத்தைகள் அன்புறு நேயம், கருணை, இரக்க நல்லின்பம், நிதானம் ஆகியவையாகும். இவற்றில் அன்புறு நேயம் முதலிடத்தைப் பெறுகிறது. இவ்வாறான நேயம் காணப்படும்போது வாழ்வில் நிம்மதியைக் காணமுடிகிறது. அது வீட்டையும் நாட்டையும் மேம்படுத்தும். நல்லிணக்கத்தின் அடிப்படை அன்பு நல்லிணக்கம் பேணப்படுவதற்கு அன்பு அடிப்படையாக அமைகிறது. நல்ல சிந்தனைகள் மேம்படும் நிலையில்  நல்லிணக்கம் நிலவும். அவ்வாறான நல்லிணக்கத்தை பல நிலைகளில் உருவாக்கிக்கொள்ள முடியும். பகைமை தவிர்த்தல் "இவ்வுலகில் எக்காலத்தும் பகைமை பகைமையால் தணிவதில்8ல. பகைமை அன்பினாலோய தணியும். இதுவே பண்டைய நெறி "  என்கிறது பௌத்த அடிப்படை நூலான தம்ம பதம் .  " தாய் தன் சேயை அரவணைத்துப் போற்றுவது போல, உங்கள் அன்பு உலகிலே பரவட்டும், ஒவ்வோர் உயிரையும் அரவணைத்துக் கொள்ளட்டும், தடையற்ற சுதந்திரத்துடன் அது உயரேயும் கீழேயும் ப