Wednesday, 15 May 2013

Buddha statues found during field study (1993-2012) - Thanjavur district

After registering for my M.Phil., in Madurai Kamaraj University during 1993 I decided to visit the Buddha statues exhibited in museums. After seeing the Buddha statues of the Chola country in Thanjavur Art Gallery, Tamil University Museum, Chennai Government Museum and State Archaeology of Government of Tamil Nadu,  I was in search of the Buddha statues which were identified by other scholars. During field study I came to know that some of the statues were missing.  During such a field work I got information about   two new granite Buddhas and one Nagapattinam bronze Buddha.        

AYYAMPET  (1999)
Nagapattinam Buddha bronze in Ayyampet (1999) 
Photo: Dr B Jambulingam
After registering  for my research, I started searching Nagapattinam Buddha bronze. Since 1856 more than 350 Buddha bronze statues were found in Nagapattinam. They are exhibited in various museums in and outside India. Though I searched for such a bronze Buddha since 1993, I could able to identify one Buddha only in 1999, with the help of Mr Ayyampet Selvaraj. During the field study carried with him I had the chance of seeing one Nagapattinam Buddha bronze at Ayyampet in Thanjavur district. The Buddha was worshipped as Munisvaran. It was found in bhumisparsa mudra. In my collections I have one such photograph of Nagapattinam Buddha bronze from National Museum, Kolkata.     

GOPINATHAPERUMALKOVIL (FEBRUARY 2002) 
Though I came to know that there were Buddha statues in and around Pattiswaram, Pazhayarai, Tiruvalanjuzhi, Cholanmaaligai and Muzhaiyur it took much time to reach out those Buddhas. For this I had to undertake many field trips either individually or with my friends or with other scholars. During one such a trip I found a Buddha in a coconut grove. It was found without head in a place called Gopinathaperumalkovil at a distance of 2 km from Pattiswaram in Pattiswaram-Tiruvalanjuzhi road in Kumbakonam taluk of Thanjavur district. The statue was found in sitting dhyana posture. On the right palm dharmachakra mudra was found.With broad shoulders it was very beautiful to look. It had all the regular iconographic features of the Chola Buddhas.
Buddha in Gopinathaperumalkovil, near Pattiswaram, Thanjavur district (February 2002) 
Photo: Dr B Jambulingam
GOPINATHAPERUMALKOVIL (JUNE 2002)
After four months when I had been there once again to see the Buddha, I am surprised to a stone upside down. Later I came to know it was also a Buddha statue. The resting legs on the pedestal proved it was Buddha. Like the above Buddha, this Buddha also had dharmachakra mudra. This Buddha was also without head. Never in my field study I found two Buddhas like this within a short distance.

After more than a decade, in August 2011,  I wanted to see those Buddhas and went there. To my shock I saw in the coconut groves so many banana trees. The Buddha statues were not there. I searched in and around that place but in vain. When I enquired about those Buddhas, I learnt that they were missing since 2006 or 2007. The remnants of history now became the thing of the past, for which  I felt much. 

In toto, during my field study in Thanjavur district, I got information about one Nagapattinam Buddha bronze and 17 granite Buddhas. In the Chola country - Thanjauvur, Nagapattinam, Tiruvarur, Pudukottai, Trichy, Karur, Perambalur and Ariyalur - only Thanjavur district had much number of Buddha statues. Let us discuss about the experiences which I had faced in these places after some time.  

My thanks are to Mr Ayyampet Selvaraj who was instrumental to find the Nagapattinam Buddha bronze which was under worship in Ayyampet. My thanks are also to  Tamil Murasu (1.2.2002),  Dinamalar (2.2.2002), Dina Thanthi (2.2.2002), Dinamani (3.2.2002), Dinakaran (3.2.2002), Dina Boomi (3.2.2002) and Kalaikkathir (3.2.2002) which published the newsitem about the Gopinathaperumalkovil Buddha which I found during field study. Some of the news clippings are found in the followig link   
http://www.facebook.com/buddhismincholacountry       

-----------------------------------------------------------------------------------------------------------------------
PREACHING OF BUDDHA
Pare ca na vijananti - mayamettha yamamase
Ye ca tattha vijananti - tato sammanti medhaga. 
       
QUARRELS CEASE THROUGH RIGHT THINKING
"The others  know not that in this quarrel we perish; those of them who realize it, have their quarrels calmed thereby-The Dhammapada6

Story
A trivial incident led to an unfortunate dispute amongst the monks in the city of Kosambi. The quarrelsome monks did not listen even to the Buddha. In the end the Buddha retired to a forest and spent the raiy season there. Owing to pressure brought on them by the laity, the monks approached the Buddha and, imploring His pardon, invited Him to the city. The Buddha then admonished them.
 (The Dhammapada, Narada Thera, The Corporate Body of the Buddha Educational Foundation, Taiwan, ROC, 1993)
-----------------------------------------------------------------------------------------------------------------------

SOME MORE TO SHARE
Recently we went to Manthralaya and Hampi. The tour experiences of our family members are shared by my wife Mrs Bagyavathi in her article in  Dinamani 28.4.2013. I hope you will enjoy it in the following link.     

Wednesday, 1 May 2013

களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலைகள் (1993-2012) - தஞ்சாவூர் மாவட்டம்

1993இல் ஆய்வில் அடியெடுத்துவைத்தபோது முதன்முதலாக அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புத்தர் சிலைகளைப் பார்க்க முடிவெடுத்தேன். தஞ்சாவூர் கலைக்கூடம், தமிழ்ப்பல்கலைக்கழக அருங்காட்சியகம், சென்னை அரசு அருங்காட்சியகம், தஞ்சாவூர் தொல் பொருள் ஆய்வுத்துறை ஆகிய இடங்களில் சோழ நாட்டைச் சேர்ந்த புத்தர் சிலைகளைப் பார்த்தபின் முந்தைய அறிஞர்கள் கூறியிருந்த சிலைகளைப் பார்த்தேன். அவற்றில் சில சிலைகள் தற்போது காணப்பெறவில்லை. இவ்வாறான பயணத்தின்போது ஆங்காங்கே விசாரித்துக்கொண்டே சென்றபோது புதியதாக இரு புத்தர் கற்சிலைகள் மற்றும் ஒரு புத்த செப்புத்திருமேனியைப் பற்றிய தகவல்களைப் பெற முடிந்தது.       


அய்யம்பேட்டை (1999)
அய்யம்பேட்டை நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனி (1999) 
புகைப்படம் ஜம்புலிங்கம்
ஆய்வுக்காகப் பதிவு செய்தபோது களப்பகுதியில் புதியதாக நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனியைத் தேடும் முயற்சியிலும் ஈடுபட்டேன். நாகப்பட்டினத்தில கி.பி.1856லிருந்து 350க்கும் மேற்பட்ட புத்த செப்புத்திருமேனிகள் கிடைத்துள்ளன. அவை உள்ளாட்டு அருங்காட்சியகங்களிலும், வெளிநாட்டு அருங்காட்சியகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவ்வாறான ஒரு புத்தர் செப்புத்திருமேனியைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் 1993இல்  இறங்கியபோதும், அவ்வாறான ஒரு திருமேனியைக் காணும் வாய்ப்பு 1999இல் கிடைத்தது.   திரு அய்யம்பேட்டை செல்வராஜ் உதவியோடு மேற்கொண்ட களப்பணியின்போது ஒரு நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனியை அய்யம்பேட்டையில் காண முடிந்தது. அமர்ந்த நிலையில், தரையைத் தொட்ட கோலத்தில் உள்ள அத்திருமேனியை முனீஸ்வரர் என்று கூறி வழிபாட்டில் வைத்து வழிபடப்படுவதைக் காணமுடிந்தது. கொல்கத்தாவிலுள்ள தேசிய அருங்காட்சியகத்திலிருந்து பெறப்பட்ட புத்தர் புகைப்படங்களில் ஒன்றினை ஒத்த கலையமைதியோடு இந்த புத்தர் செப்புத்திருமேனி உள்ளது.

கோபிநாதப்பெருமாள்கோயில் (பிப்ரவரி 2002)  ஆய்வு தொடங்கியது பட்டீஸ்வரம், பழையாறை, திருவலஞசுழி, சோழன்மாளிகை, முழையூர் உள்ளிட்ட பல இடங்களில் புத்தர் சிலைகள் இருப்பதைக் கேள்விப்பட்டபோதிலும் அந்தந்த இடங்களில் உள்ள புத்தர் சிலைகளைப் பற்றி அறியவும், புதிய சிலைகளைக் கண்டுபிடிக்கவும் தொடர்ந்து களப்பணியினை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அவ்வாறாக பிப்ரவரி 2002இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு களப்பணியின்போது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் பட்டீஸ்வரம்-திருவலஞ்சுழி சாலையில் பட்டீஸ்வரத்திலிருந்து 2 கிமீ தொலைவிலுள்ள கோபிநாதப்பெருமாள் என்னுமிடத்தருகே ஒரு தென்னந்தோப்பில் தலையில்லாத புத்தர் சிலையைக் காணமுடிந்தது. பீடமின்றி உள்ள இச்சிலையின் தலைப்பகுதி காணப்படவில்லை. அமர்ந்த பத்மாசன நிலையில் தியான கோலத்தில் மார்பில் மேலாடை,  வலக்கரத்தில் தர்மசக்கரக்குறி, திரண்ட மார்பு,  திண்ணிய தோள்கள் போன்ற வழக்கமான கூறுகளுடன் இச்சிலை இருந்தது.
 

பட்டீஸ்வரம் அருகில் புத்தர் (பிப்ரவரி 2002) 
புகைப்படம் ஜம்புலிங்கம்
கோபிநாதப்பெருமாள்கோயில் (சூன் 2002) நான்கு மாதங்கள் கழித்து மறுபடியும் அப்பகுதிக்குக் களப்பணி சென்றபோது பிப்ரவரி 2002இல் கண்டுபிடிக்கப்பட்ட சிலைக்கருகில் தலைகீழாக ஒரு கருங்கல் இருப்பதைக் காணமுடிந்தது.  அந்தக் கல்லை புரட்டிப் பார்க்கும்போது அது ஓர் உடைந்த சிலையாக இருப்பதை அறியமுடிந்தது. அச்சிலையில் புத்தர் சிலைக்குரிய கூறுகள் இருந்தன. பீடத்தின்மீது அமர்ந்த நிலையில் இருப்பதைக் கால்கள் தெளிவுபடுத்தின.  கால்களின் மேல் கைகள் தியான கோலத்தில் வானை நோக்கிய நிலையில் இருந்தன. கையில் தர்மசக்கரக்குறி இருந்தது. கோபிநாதப்பெருமாள் என்னுமிடத்தின் அருகே குறுகிய கால இடைவெளியில் ஒரே இடத்தில் அருகருகே இரு சிலைகளைக் கண்டுபிடித்தது மகிழ்ச்சியைத் தந்தது.  ஆகஸ்டு 2011இல் அச்சிலைகளைப் பார்க்கச் சென்றபோது பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. முன்பு தென்னந்தோப்பு இருந்த இடத்தில்  வாழைத்தோப்பு உருவாகியிருந்தது. வாழைத்தோப்பைச் சுற்றியும் அருகிலும் தேடியும் சிலைகளைக் காணமுடியவில்லை.அருகில் விசாரித்தபோது 2006 அல்லது 2007 முதல்  அச்சிலைகளை அங்கு காணவில்லை என்று தெரிவித்தனர். 10 ஆண்டுகளுக்கு முன் பார்த்த சிலைகள் இப்போது இல்லை. வரலாற்றின் சுவடுகள் கண்ணுக்கு முன் மறைவது வேதனையைத் தந்தது.

ஆய்வின்போது புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மேற்கண்ட சிலைகள் உட்பட தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு செப்புத்திருமேனி மற்றும் 17 புத்தர் சிலைகளை பற்றிய குறிப்புகள் உள்ளன. தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டுமே அதிகமான எண்ணிக்கையிலான புத்தர் சிலைகள் காணப்படுகின்றன. இவற்றைக் காணும்போது பெற்ற அனுபவங்களைக் குறித்து பிறிதொரு பதிவில் விவாதிப்போம்.

நன்றி : அய்யம்பேட்டையில் தனியாரிடம் வழிபாட்டில் இருந்த நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனியைக் காண உதவிய திரு அய்யம்பேட்டை செல்வராஜ்.

கோபிநாதப்பெருமாள்கோயில் அருகே கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலையைப் பற்றிய செய்தியை வெளியிட்ட கீழ்க்கண்ட பத்திரிக்கைகளுக்கும் என் நன்றி.
படத்துடன் செய்தி, தமிழ்முரசு, 1.2.2002
பட்டீஸ்வரத்தில் புத்தர் சிலை கண்டுபிடிப்பு, தினமலர், 2.2.2002
பட்டீஸ்வரம் அருகே புத்தர் சிலை கண்டுபிடிப்பு, தினத்தந்தி, 2.2.2002
பட்டீஸ்வரம் அருகே சோழர் கால புத்தர் சிலை கண்டுபிடிப்பு, தினமணி,  3.2.2002
புத்தர் சிலை கண்டுபிடிப்பு, தினகரன், 3.2.2002
பட்டீஸ்வரம் அருகே அழகிய புத்தர் சிலை, தினபூமி, 3.2.2002
தஞ்சை அருகே புத்தர் சிலை கண்டெடுப்பு, காலைக்கதிர், 3.2.2002
கீழ்க்கண்ட முகநூலில் கண்டுபிடிப்பு பற்றிய செய்திகளைக் காணலாம். 
http://www.facebook.com/buddhismincholacountry


-----------------------------------------------------------------------------------------------------------------------
புத்தர் அறவுரை 
இவ்வுலகில் நாம் இறக்கப்போகிறோம் எனப் பிறர் அறியமாட்டார்கள். அதனை அறிந்தவர்கள் கலகம் செய்வதை நிறுத்திவிடுகின்றனர்.  

-தம்ம பதம்  6
சூழல்
கோசாம்பியில் புத்தர் இருந்தபோது இரண்டு பிக்குகளிடையே தோன்றிய சண்டை, ஏனைய பிக்குகளையும் ஊர் மக்களையும் இரு குழுவினராகப் பிரித்துச் சண்டையிடும்படியாக வளர்ந்தது. இதையறிந்த புத்தர் அவர்களுக்குப் பல வகையில் அறிவுரை கூறியும் அவர்கள் உணர்ந்து திருந்தினார்களில்லை. எனவே, இவர்கள் மீது வருத்தமுற்ற புத்தர் காட்டில் தனியாக வாழச் சென்றுவிட்டார். இதனை அறிந்த பிக்குகள் திருந்தி, புத்தரை அணுகி மன்னிப்புக் கேட்டு நின்றனர். அப்பொழுது புத்தர் கூறியது இப்பாடல்.  
(தம்ம பதம், தமிழாக்கம்: நா.செயப்பிரகாசு, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2002)  

Buddha statues found during field study (1993-2012) - Thanjavur district
During the field study carried out in Thanjavur district during the last two decades two granite Buddha statues at Gopinathaperumalkoil near Pattiswaram and one Nagapattinam Buddha bronze in Ayyampet were found by me.  In Chola country, Thanjavur district has maximum number of Buddha statues.  English version of the article will appear on 15th May.

 உங்களுடன் பகிர்ந்துகொள்ள மற்றொரு செய்தி
அண்மையில் நாங்கள் மந்த்ராலயம், ஹம்பி உள்ளிட்ட இடங்களுக்குச் சுற்றுலா சென்றுவந்தது தொடர்பாக என் மனைவி திருமதி பாக்கியவதி எழுதியுள்ள பயணக்கட்டுரை தினமணி 28.4.2013 இதழில் வெளியாகியுள்ளது. கீழேயுள்ள தொடர்பில் சொடுக்கினால் கட்டுரையைப் பார்க்கலாம், படிக்கலாம். வாருங்கள்.    


  
11.5.2013இல் மேம்படுத்தப்பட்டது