பௌத்த சுவட்டைத் தேடி : கவிநாடு

செப்டம்பர் 30, 2013
செப்டம்பர் 1999இல் சுந்தரபாண்டியன்பட்டினம் என்னுமிடத்தில் நின்ற நிலையிலுள்ள புத்தர் சிலை இருப்பதாக எனக்குத் தெரிவித்த முனைவர் சந்திரபோஸ் (இணைப்பேராசிரியர், வரலாற்றுத்துறை, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை), அண்மையில் புதுக்கோட்டை பகுதியில் புதிய புத்தர் சிலை பற்றிக் கேள்விப்பட்டதாகத்ொலைபேசிவழி தெரிவித்தார். அப்போது அவர், "இப்பகுதியில் சமணர் சிலைகளே அதிகம் இருக்கும் நிலையில் நீங்கள் ஏதாவது புத்தர் சிலையை அண்மையில் பார்த்துள்ளீர்களா?" என்று என்னிடம் கேட்டார். நான் "அவ்வாறு புத்தர் சிலை எதுவும் பார்க்கவில்லை. வாய்ப்பிருப்பின் அச்சிலையைப் பார்க்க விரைவில் வருகிறேன்" என்று அவரிடம் கூறினேன். 

அக்டோபர் 1, 2013
இன்றைய பத்திரிக்கைச் செய்தியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை குடுமியான்மலை சாலையில் கட்டியாவயல் அருகே உள்ள கவிநாடு கண்மாயில் 3.5 அடி உயரமும், 3 அடி அகலமும் உள்ள புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியிருந்தது. அச்செய்தியில் முனைவர் சந்திரபோஸ் பெயர் மேற்களாகக் காட்டப்பட்டிருந்த நிலையில்  அவரோடு ொடர்பு கொண்டு செய்திக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு அச்சிலையைப் பற்றி விசாரித்தேன். புகைப்படத்தில் சிலையைப் பார்த்தபோது சமணர் சிலை போல எனக்குத் தோன்றவே அச்சிலையை நேரில் பார்க்கவேண்டும் என்ற எனது ஆவலைக் கூறினேன். சிலையமைப்பு சற்று வித்தியாசமாக உள்ளதாகக் கூறிய அவர் வாய்ப்பு கிடைக்கும்போது வரும்படியும், இருவரும் சென்று அச்சிலையைப் பார்க்கலாம் என்றும் கூறினார். 


அக்டோபர் 6, 2013
தொடர்ந்து வந்த முதல் ஞாயிறன்று புதுக்கோட்டை பயணித்தேன். தஞ்சாவூரிலிருந்து புதுக்கோட்டை சென்று அங்கிருந்து நகரப் பேருந்து வழியாக இடத்தை விசாரித்துக்கொண்டு கவிநாடு கண்மாய் சென்றடைந்தேன். சுமார் 2 கிமீ கண்மாயில் நடந்து சிலையைத் தேடிக்கொண்டே சென்றேன். மிக ரம்மியமான சூழல். மனதிற்கு நிறைவாக இருந்தது. தமிழ்நாட்டில் இதுதான் பெரிய கண்மாய் என்று அங்கு கூறினர். சிறிது தூரம் நடந்தபின் சிலையைப் பார்த்துவிட்டேன். சுருள் முடியை புத்தர் சிலைகளிலும், சமணர் சிலைகளிலும் காணமுடியும். புத்தர் சிலையின் தலையில் வழக்கமாகக் காணப்படுகின்ற தீச்சுடர் வடிவிலான முடி அச்சிலையில் காணப்படவில்லை. நெற்றியில் திலகக்குறியோ,  கையில் தர்மசக்கரக்குறிய இல்லை. அது சமணர் என்று உறுதியாகத் தெரிந்ததும், அடுத்த விடுமுறை நாளில் வந்து முழு விவரங்களைத் தொகுக்கலாம் என்ற அடிப்படையில் கவிநாடு கண்மாயை விட்டுப் பிரிய மனமின்றி கிளம்பினேன். 

அக்டோபர் 12, 2013

கவிநாடு சமணர் (முன்புறம்), புகைப்படம் : முனைவர் சந்திரபோஸ்
அடுத்த விடுமுறை நாளான சனிக்கிழமை மறுபடியும் அவ்விடத்திற்குக் கிளம்பினேன். என் பயணம் குறித்து முனைவர் சந்திரபோஸ் அவர்களிடம் தெரிவித்தேன். அவரும் உடன் வர சம்மதித்தார். புதுக்கோட்டை சென்று சேர்ந்தபின் அவரைத் டர்பு கொண்டேன். அவர் வந்ததும் சிலையைப் பற்றி சிறிது நேரம் பேசினோம். பின்னர் அவர் பைக்கில் என்னை சிலை இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றார். சிலையைப்பார்த்தபின் ஒரு சிறிய அதிர்ச்சி. சிலையின் தலைப்பகுதி காணப்படவில்லை.  அப்பகுதியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த ஒரு பெண்மணியிடம் கேட்டபோது அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிலர் அதைத் ூக்கி கண்மாயில் எறிந்துவிட்டதாகக் கூறினார். சிலையின் பிற பகுதிகளைப் பார்த்தோம். புகைப்படத்தில் மார்பில் ஒரு கோடு போல ஆடை இருப்பதாகத் தோன்றினாலும், நேரில் பார்த்தபோது மேலாடை தெரியவில்லை.

கவிநாடு சமணர் (பின்புறம்), புகைப்படம் : முனைவர் சந்திரபோஸ்
 சிலையின் பின்புறத்தை நோக்கும்போது ஆடையில்லாமல் இருப்பதை அறியமுடிந்தது. சிலையில் ஆடையில்லாமல் இருப்பதை இடுப்பிற்குக் கீழே உள்ள பகுதி மூலம் தெளிவாக அறியமுடிந்தது.  
 
கவிநாடு சமணர் சிற்பத்துடன் பா.ஜம்புலிங்கம், புகைப்படம் : முனைவர் சந்திரபோஸ்

 ஆலங்குடிப்பட்டி, செட்டிப்பட்டி, வெள்ளனூர் ஆகிய இடங்களில் புத்தர் சிலைகள் இருப்பதாக வரலாற்றறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி தன்னுடைய பௌத்தமும் தமிழும் (1940) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளபோதிலும் ஆலங்குடிப்பட்டி அருகே சமண சிலையை மட்டுமே காணமுடிந்தது. செட்டிப்பட்டியிலும் வெள்ளனூரிலும் இருந்த சிலைகள்கூட சமணர் சிலைகளாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. புதுக்கோட்டை ஒரு மிகச் சிறந்த சமண மையமாக இருந்ததை உறுதிசெய்யும் சான்றாக கவிநாடு பகுதியில் இந்த சிலை கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். 

ஆய்வு தொடங்கிய 1993 முதல் முதல் புத்தர் சிலைகளைத் தேடிச் சென்றபோது பல சமண தீர்த்தங்கரர் சிலைகளைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்நிலையில் இந்த சமணர் சிலை எனது களப்பணியின்போது காணப்பட்ட 12ஆவது சிலையாகும். ௌத்த களப்பணி ஆய்வு ஒரு நிலையில் என்னை சமண களப்பணி ஆய்விற்கும் இட்டுச்செல்வதற்கு இதுபோன்ற களப்பணிகள் உதவியாக அமைகின்றன.   


நன்றி
இரண்டாவது முறை களப்பணி சென்றபோது உடன் வந்ததோடு, கவிநாடு சமணர் புகைப்படங்களைத் தந்து உதவிய முனைவர் சந்திரபோஸ் அவர்களுக்கும், செய்தியை வெளியிட்ட கீழ்க்கண்ட பத்திரிக்கைகள் உள்ளிட்ட அனைத்து பத்திரிக்கைகளுக்கும் மனமார்ந்த நன்றி.
1.கவிநாட்டில் சமணர் சிலை கண்டெடுப்பு, தினமணி, 15.10.2013
2.புத்தர் அல்ல..சமண தீர்த்தங்கரர், தி இந்து, 15.10.2013
3. கவிநாடு கண்மாயில் கண்டெடுத்தது சமணர் சிலைதான் : தமிழ்ப்பல்கலை. உறுதி, தினமலர், 15.10.2013
4.புதுக்கோட்டை அருகே சமணர் சிலை கண்டுபிடிப்பு தமிழ்ப்பல்கலைக்கழகக் கண்காணிப்பாளர் தகவல், தினத்தந்தி, 15.10.2013
5.கவிநாடு கண்மாயில் கிடைத்த சமணர் சிலை தமிழ்ப்பல்கலைக்கழகத்தினர் ஆய்வு, மாலை மலர், திருச்சி, 15.10.2013
6.Statue found in Pudukottai not of Buddha, The Hindu, 15.10.2013
7. Statue found in Kavinadu Tank is a Jain Tirthankara, claims research expert, The New Indian Express, 15.10.2013
8.கவிநாடு கண்மாயில் கண்டுடெடுக்கப்பட்டது புத்தர் சிலை இல்லை, தினகரன், 16.10.2013
9.கண்மாய் கரையில் கண்டெடுத்த சிலை : சர்ச்சைக்கு ஆய்வாளர் முற்றுப்புள்ளி, தினமலர், 14.10.2013
10.Ruined sculpture of Mahavira, not Buddha, Times of India, 21.10.2013

1 அக்டோபர் 2017இல் மேம்படுத்தப்பட்டது

இச்சிலை 2017இல் கண்டுபிடிக்கப்பட்டதாக நாளிதழ்களில் வந்த செய்திகள்


புதுக்கோட்டை கவிநாடு கண்மாணியில் சிதைந்த நிலையில் சமணர் சிலை கண்டெடுப்பு : வரலாற்று ஆர்வலர்களின் மரபுவழி நடைப்பயணத்தின்போது கிடைத்தது, தி இந்து, 1 அக்டோபர் 2017

புதுக்கோட்டையில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலை கண்டுபிடிப்பு, புதிய தலைமுறை, 1 அக்டோபர் 2017

தினகரன், 1 அக்டோபர் 2017


முகநூல் பதிவு 30 செப்டம்பர் 2017






 -----------------------------------------------------------------------------------------------------------------------
புத்தர் அறவுரை

நன்றாக வேயப்படாத கூரையினிடையில் மழைநீர் எளிதில் புகுந்துவிடும். அதுபோல பக்குவமற்ற மனத்துள் ஆசை எளிமையாகவும் முழுமையாகவும் புகுந்துவிடும். -தம்ம பதம்  13
நன்றாக வேயப்பட்கூரையுள் மழைநீர் எளிதில் புக இயலாது. அதுபோல் பக்குவப்பட்ட மனத்துள் ஆசை எளிதில் புக இயலாது. -தம்ம பதம்  14
 சூழல்

புத்தரின் உறவினனான நந்தன், தனது திருமண நாளன்று புத்தரைத் தொடர்ந்து சென்று துறவியாகவிட்டான். எனினும் அவன் எப்பொழுதும் தனக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மணமகளையே நினைத்துக் கொண்டிருந்தான். இதை அறிந்த புத்தர நந்தனுக்குத் தவநெறியைப் போதிக்கிறார். அந்நெறியில் சென்ற நந்தன் மனத்தெளிவு பெற்று ஞான நிலையாம் அரகந்த நிலையை அடைகிறார். அச்சமயத்தில் புத்தர் கூறிய பாடல் இது. நந்தனுடைய முந்தைய மனநிலை நன்கு வேயப்படாத கூரையையும், மாறிய மனநிலை நன்கு வேயப்பட்ட கூரையையும் குறிக்கும்.  

(தம்ம பதம், தமிழாக்கம்: நா.செயப்பிரகாசு, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2002)  


In search of imprints of Buddha: Kavinadu
It was reported that a Buddha was found in Kavinadu near Pudukottai. From the accompanying photograph it was understood that it was a Jain. In order to confirm it field study was carried out to the spot and confirmed that it was a Jain Tirthankara. English version of the article will appear on 15th of this month.
-----------------------------------------------------------------------------------------------------------------------
கீழ்க்கண்ட முகநூலில் சோழ நாட்டில் புத்தர் சிலைகள் தொடர்பான செய்திகளைக் காணலாம் : http://www.facebook.com/buddhismincholacountry.

22.11.2013இல் மேம்படுத்தப்பட்டது/Updated on 22.11.2013

Comments

  1. இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. போகிற போக்கைப் பார்த்தால் சமணர் சிலைகளையும் ஆய்ந்து இன்னொரு முனைவர் பட்டம் பெற்று விடுவீர்கள் என்று தோன்றுகிறது. வாழ்த்துக்கள் ! இனி தீபாவளிக்காக இன்னொரு வாழ்த்தும் உங்களுக்கு உரித்தாகுக!

    Typed with Panini Keypad

    ReplyDelete
  3. தங்கள் ஆய்வுப்பணிகள் தொடரட்டும் !

    வெற்றி பெறட்டும் !!

    ReplyDelete
  4. My kind & Sincere thanx to Ayya Jambulingam For the information about the Jain idol found in Kavinaadu near Kudumiyaanmalai.... Thru urs Effort it's authenticated as an idol of Jainism .........

    ReplyDelete
  5. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_21.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  6. சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூ தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளதறிந்து மகிழ்ச்சி. நன்றி.

    ReplyDelete

Post a Comment